எபிரெயர், மூன்றாம் அதிகாரம் 57-09-01M 1 காலை வணக்கம், நண்பர்களே, இந்தக் காலை கர்த்தருடைய ஆராதனையில் இங்கே இருப்பது ஒரு சிலாக்கியமாய் உள்ளது. நாம் ஒரு மகத்தான நேரத்திற்காக நம்பிக்கையோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். 2 நாம் வழக்கமாக கண்காணிகளுடைய அலுவலகம் என்று அழைக்கிற இடத்தில் நான் அங்கே பின்னால் இருந்தேன், அங்கே இப்பொழுது ஒலிப்பதிவு கருவிகள் இருக்கின்றன. நான் அங்கே பின்னால் இல்லினாய்ஸில் உள்ள ஜாலியட் என்ற இடத்திலிருந்து வந்திருந்த ஒரு வாலிபப் பெண்மணியோடும், அவளுடைய தாயாரோடும் சற்று முன் பேசிக்கொண்டிருந்தேன். அந்தப் பெண் என்ன ஒரு தேவனுடைய கிருபையின் விளைபயன் என்பதைக் குறித்து நான் சற்று முன்னர் எண்ணிப்பார்த்துக் கொண்டிருந்தேன். பெரும்பாலும் இங்கே சுற்றிலும் உள்ள நம்மெல்லோருக்கும் அவளைத் தெரியும். அவள் மித மிஞ்சிய குடிப்பழக்கமுடையவள், ஒருவிதமாக மிக மோசமான நிலையில் இருந்த ஒருவள். அவள் மேடையைவிட்டுச் சென்றதிலிருந்து, இன்று காலை வரையில், இதற்கு முன்பு அவளுடைய கதையை நான் ஒருபோதும் தெளிவாகக் கேட்டதேயில்லை. கர்த்தர் அவளுடைய தவறு எல்லாவற்றையும், என்ன சம்பவிக்கப் போவதாயிருந்தது என்பதையும் வெளிப்படுத்தியிருந்தார். தேவன் அவளை ஒருஒரு குடிகார கல்லறையிலிருந்து இரட்சித்திருந்த காரணத்தால் அவள் மேடையைவிட்டு சென்று அழுது களிகூர்ந்தாள். அவள்... ஒரு பெண்மணி ரோஸல்லாவிடத்திற்கு நடந்து சென்று தன்னுடைய மகளைக் குறித்து கூறி அழத் துவங்கினாள், அவள் ஒரு போதை பொருளுக்கு அடிமையாயிருந்தாள் என்று நான் நினைக்கிறேன். உங்களுக்குத் தெரியும், தேவனுடைய கிருபையினால், (அதற்கு அடுத்த இரவு அழைக்கப்பட்டாள் என்று நான் நான் நம்புகிறேன், ரோஸல்லா அப்படித்தானே?) போதைப்பொருளுக்கு அடிமையாயிருந்த அந்த பெண் அழைக்கப்பட்டு சுகமாக்கப்பட்டாள். அவளும், அவளுடைய கணவனும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அழகான பெண்மணி ரோஸல்லாவோ தேவனைக் குறித்து அனுபவம் வாய்ந்தவள். இப்பொழுது அவள் மிகவும் மரியாதைக்குரியவளாயிருக்கிறாள், அவள் தன்னுடைய இருதயத்தில் இருந்த ஒரு அழைப்பினை உணர்ந்திருக்கிறாள். ஆனால் பெண் பிரசங்கிமார்களைக் குறித்து வேதத்தில் அறிவோம். பாருங்கள், அதில் ஏதோ ஒரு காரியம் உள்ளதை அவள் அறிந்திருக்கிறாள். தேவன் அவளை சாட்சி கொடுக்க சிறைச் சாலைகளுக்குள்ளும் மற்ற இடங்களுக்கும் வழிநடத்திக் கொண்டிருக்கிறார். 3 தேவனுடைய சித்தப்படி தேடி அறிந்துகொள்வது அப்படியே அற்புதமானதாயுள்ளது. சில நேரத்தில் நாம் ஒரு உணர்வினைப் பெற்றுக்கொள்கிறோம், ஆனால் அந்த உணர்வினை சில இடங்களுக்கு கொண்டுச் செல்ல விரும்புகிறோம். நீங்கள் கவனிக்கவில் லையென்றால், பிசாசு அந்த உணர்வினை தாறுமாறாக்கி ஏதோ ஒன்றிற்குள்ளாக கொண்டுச் செல்வான். ஆனால் நாம் வேதத்தில் தரித்திருக்கும் வரையில், நாம் அப்பொழுது சரியாயிருக்கிறோம், நீங்கள் பாருங்கள், நாம் கர்த்தருடைய சித்தத்தோடு முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். 4 ஆகையால் அந்த ரோஸல்லா முடிவாக எங்காவது ஊழியக்களங்களுக்குள் திரும்புவாள் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் அமெரிக்கா சுவிசேஷத்தை விரும்புகிறதில்லை. நீங்கள் அதை அறிவீர்கள். நாம் அதை அப்படியே நன்கு ஒப்புக்கொள்ளலாம், அதாவது இந்த ஆங்கிலேய இன மரபின மக்களும் முடிவுற்றுவிட்டனர். அவ்வளவுதான். அமெரிக்கா இனி ஒருபோதும் சுவிசேஷத்தை ஏற்றுக் கொள்ளாது. ஓ, நீங்கள் இடையிடையே ஒரு சிலவற்றை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் சுவிசேஷத்தை பொறுத்தமட்டில் அது முற்று பெற்று விட்டது. உங்களால் அவர்களுக்கு பிரசங்கிக்க முடியாது, அவர்களிடத்தில் பேசுவுங் கூட முடியாது. அவர்கள் எதையுமே விசுவாசிக்கமாட்டார்கள். புரிகிறதா? அவர்கள் தங்களுடைய சொந்த தலைகனம்பிடித்தக் கருத்துகளை வைத்துக்கொண்டு, அவைகளையே நிலை நாட்டியுள்ளனர். இந்த தேசத்திற்கான நியாயத்தீர்ப்பே அடுத்த காரியங்களாகும். அவள் அதையும் கூடப் பெற்றுக் கொள்ளப் போகிறாள். அது ஒருகால் கிளர்ச்சியின்மையினூடாக இருக்கலாம். அது அணுகுண்டினூடாக இருக்கலாம். அது ஒரு பெரிய வாதையினூடாக, ஒரு வியாதியினூடாக அல்லது வேறேதோ ஒரு காரியத்தினூடாக இருக்கலாம். ஆனால் அவள் நியாயத்தீர்ப்பிற்கு ஆயத்தமாயிருக்கிறாள். அது வந்து கொண்டிருக்கிறது. கோடிக்கணக்கானோர் மடிந்து போவர். 5 நேற்றைய தினம் நாங்கள் ஒரு இடத்தைக் கடந்து வந்தோம், அதாவது சகோதரன் ஸேபல் அவர்களும், நானும்... சகோதரன் உட்ஸ் அவர்களும் கென்டக்கியிலிருந்து வந்துக்கொண்டிருந்தோம். நாங்கள் அங்கே மூன்று நாட்களாக இருந்த போது, ஒரு வீடமைப்பு திட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தைக் கடந்து செல்ல நேரிட்டது. அப்பொழுது சகோதரன் ஸேபல் அவர்கள், "இல்லை" என்றார். நான் மறந்து விட்டேன். அவர், "அந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜனங்களில் பெரும்பாலோனார், எவருமே எந்த சபைக்குமே செல்லுகிறதில்லை" என்று கூறினார். 6 நீங்கள் அவர்களிடத்தில் அதைக் குறித்து கேட்டுப் பாருங்கள். "நாங்கள் எங்களுடைய தொலைக்காட்சியை வைத்துள்ளோம். அந்தவிதமாகவே நாங்கள் ஆறுதலைக் கண்டடைகிறோம்' என்பார்கள். பார்த்தீர்களா? அதுதான் அமெரிக்க மனப்பான்மையாயுள்ளது. பார்த்தீர்களா? "நாங்கள் தொலைக்காட்சியை வைத்துள்ளோம். நாங்கள் ஏராளமான பணத்தை வைத்துள்ளோம். நாங்கள் அருமையான கார்களை வைத்துள்ளோம். நல்ல வீடுகளை வைத்துள்ளோம். எங்களுக்கு ஆண்டவரிடத்தில் என்ன தேவை உள்ளது? எங்களுக்கு அது தேவையில்லை" என்கிறார்கள். அதுதான் அவர்கள் மனப்பான்மையே, 7 நாம் பெற்றுள்ள மார்க்கம் மற்றும் இரட்சிப்பைக் குறித்த காரியத்தில் அன்பு மாத்திரமே உண்மையான தேவபக்தியுள்ள ஜனங்களுக்கு மத்தியில் உள்ளது. அது சம்பவிக்கும் என்று வேதம் கூறியுள்ளதை நீங்கள் அறிவீர்கள். [சபையோர், "ஆமென்" என்கின்றனர். ஆசி.] ஹ-ஹ. வேதத்தை வாசிப்பவர்களாகிய நீங்கள், "ஆமென்" என்று நீங்கள் சத்தமிட்டுக் கூறுவதை நான் கேட்கிறேன். அங்கே பின்னால் உள்ள பிரசங்கிமார்களே உங்களைத் தான் கூறுகிறேன். அது உண்மை . கடைசி நாட்களில் அன்பு தணிந்து போம். தெரிந்து கொள்ளப்பட்ட தேவனுடைய ஜனங்களிடையே மாத்திரம்தான் அன்பு விடப்பட்டிருக்கும். "தகப்பன் தாய்க்கு விரோதமாகவும், தாய் தகப்பனுக்கு விரோதமாகவும், பிள்ளைகள் பெற்றோருக்கு விரோதமாகவும், இன்னும் பல்வேறுப்பட்டவர்கள் ஒருவருக்கு விரோதமாக ஒருவர் இருப்பார்கள்." தெரிந்துகொள்ளப்பட்டவர்களிடத்தில் மட்டுமே அன்பு விடப்பட்டிருக்கும். "தெரிந்துக்கொள்ளுதல்" என்னும் வார்த்தை தெரிந்துகொள்ளப்பட்ட என்ற வார்த்தையிலிருந்தே வருகிறது, தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள். 8 சற்றுமுன் அந்த அறையிலே என்னிடத்தில் ரோஸல்லா குறிப்பிட்டுக் கூறிக்கொண்டிருந்த அந்த சம்பவத்தில், அந்த இரவு ஏதோக்காரியம் சம்பவித்தது என்று அவள் கூறினதைக் குறித்து நான் சற்றுமுன் சிந்தித்துக் கொண்டிருந்தேன். அவள் மிதமிஞ்சிய மதுபான அடிமையாய் போதைக் கொண்ட கண்களோடிருந்த போது, எப்படியாய் அவளுடைய ஜீவியத்தைக் குறித்த யாவும் கூறப்பட்டது. போதைப் பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு, நல்வாழ்வு அளிக்கும் எந்த சங்கங்களுமே ஒன்றுமே செய்ய முடியாமற் போயிற்று. நான்கு மருத்துவர்கள் அவளைக் கைவிட்டிருந்தனர். ஒன்றுமே செய்ய முடியாமற்போயிற்று. எப்படி அவள் இங்கு வந்த அந்த நொடிப்பொழுதிலிருந்து ஏதோக் காரியம் சம்பவித்திருந்தது. 9 இப்பொழுது அவள் அந்த போதைக்கொண்ட கண்களோடு இல்லை. அவள் முப்பத்தி மூன்று வயதுடைய ஒரு அருமையான, அழகான வாலிபப் பெண்மணியாய் இருக்கிறாள். ஆனால் காண்பதற்கு அவள் கிட்டத்தட்ட இருபத்திரண்டு வயதைப் போன்று உள்ளாள். தேவன் அவளுக்காக என்ன செய்தார், எப்படி செய்தார் என்றும், அவள் எப்படி வித்தியாசமாக காணப்படுகிறாள் என்றும் பாருங்கள். ஆனால் நான், "ரோஸல்லா, உலகத்தோற்றத்திற்கு முன்னே, தேவன் அந்த நொடிப்பொழுதை நியமித்திருந்தார்" என்றேன். ஆம், ஐயா. புரிகிறதா? சரி. அந்த சிறுவன் பில்லி பால் அங்கே பின்னால் இருந்தபோது, அங்கே அந்த நெருக்கத்தில் இருந்துக்கொண்டு ஜனங்களுக்கு அன்று இரவு ஜெப அட்டைகளை கொடுத்துக்கொண்டிருந்தான். அவன் யாருக்கு ஜெப அட்டையை கொடுத்துக்கொண்டிருந்தான் என்பதை எப்படியும் சற்றேனும் அறியாமலிருந்தான். ரோஸல்லா, அது அற்புதமாயிருக்கிறதல்லவா? (சகோதரி ரோஸல்லா கிரிப்பத், "சகோதரன் பிரான்ஹாம், தேவன் எங்களை வழிநடத்த வேண்டும் என்று சபையானது ஜெபிக்குமா என்று நான் வியப்புறுகிறேன், அவர் எவ்வளவு பலமுள்ளவராயிருக்கிறார்."- ஆசி.] ஆமென். ரோஸல்லா, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நாங்கள் அதற்காக ஜெபிப்போம் என்று நான் நிச்சயம் நம்புகிறேன். தேவன் அவளை வழிநடத்தும்படிக்கு சபையானது ஜெபிக்க வேண்டும் என்று அவள் விரும்புகிறாள். அதுவே அவருடைய மாறாத கரத்தைப் பின்பற்றுவதாகும். ஓ, அது மிகவும் நல்லதாயுள்ளது. 10 இந்த காலையில் குறிப்பிடத்தக்க ஒரு புதுச் செயல்முறைத் திட்டம் என் முன் வைக்கப்பட்டது. அது இங்கே ஏதோ ஒரு பன்மடங்கு செல்வப் பெருக்கு கொண்ட கோடீஸ்வரர் கென்டக்கியில் உள்ள லூயிவில்லில் எனக்கு ஐம்பது இலட்சம் டாலர்கள் மதிப்பில் ஒரு கூடாரத்தைக் கட்டித் தருவதைக் குறித்ததாகும். ஆனால் என் இருதயத்தில் உள்ள ஏதோ ஒன்று, "நிறுத்து, நீ ஒரு மேய்ப்பன் அல்ல" என்றது. புரிகிறதா? ஆகையால் ஐம்பது இலட்சம் டாலர்கள் பணம் குறிப்பிட்ட காரியத்திற்காக ஒதுக்கப்படும். அது மதுபானம் மற்றும் அதுபோன்ற காரியத்திற்காக அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டியதாயிருக்கும். ஆனால் அவரோ கர்த்தருக்காக ஒரு கூடாரத்தைக் கட்டும்படி செலவிட விரும்புகிறார். ஆனால் அதுவோ தேவனுக்கு ஊழியம் செய்கிற... ஒரு தேவனுடைய ஊழியக்காரனுக்கு செல்கிறது என்று நான் நம்புகிறேன். ஆனால் அதற்கு ஐம்பது இலட்சம் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அது என்ன ஒரு கூடாரமாய் உருவாகும் என்பதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். ரோஸல்லா அது எப்படி பிரமாண்டமாய் காணப்படும் என்பது புரிகிறதா? ஆனால் அதை வித்தியாசமாக கூறுகிற ஏதோ ஒன்று இங்கே உண்டு புரிகிறதா? பார்த்தீர்களா? இங்கே ஏதோ ஒன்று உண்டு. 11 நாம் இந்த சிறிய பழைய கூடாரத்திற்கு வருகிறோம். நீங்கள் அந்நியராயிருக்கிறீர்கள். இது இங்கே மூலையில் உள்ள ஒரு கவர்ச்சி வாய்ந்த ஸ்தலமாய் இருக்கக் கூடும். நீங்கள் அதை தெளிவாக உணருகிறதில்லை. அந்த ஜனங்களோ இந்த இடத்தில் அதை கட்டி உருவாக்க விரும்பியுள்ளனர். ஆனால் இதுவோ நாம் இதை விரும்புகிற விதத்திலேயே உள்ளது. பாருங்கள், நாம் இதை விரும்புகிற விதத்தில் இது உள்ளது. நாம் அங்கேயிருந்த அந்த பழைய இருக்கைகளில் உட்கார்ந்து கொண்டிருந்தோம், அதுவே இங்கே இந்த கூடாரத்தில் இருந்த பழைய அசலான இருக்கைகளாயிருந்தன. அவை வெள்ளத்தின்போது மிதந்து மேலே சென்றுவிட்டிருந்தன. 12 என்னுடைய வேதாகமம் பிரசங்க பீடத்தின் மேல் இந்த விதமாக திறந்து வைக்கப்பட்டிருந்தது. அப்பொழுது அதுவோ மேலே மிதந்து சென்று மேற்கூரையின் மேல் ஒட்டிக்கொண்டிருந்து, பின்னர், "கர்த்தராகிய நான் அதை நட்டிருக்கிறேன். என் கரத்திலிருந்து அதை எவரும் பிடுங்கிக்கொள்ளாதபடிக்கு நான் அதற்கு இரவும் பகலும் நீர்ப்பாய்ச்சுவேன்" என்று திறக்கப்பட்டிருந்த வார்த்தையோடு மேலே சென்று மீண்டும் திரும்பி வந்தது. நாம் எப்படி இங்கே ஒரு சிறு படகின் மூலம் துடுப்பினைப் பயன்படுத்தி பார்வையிட்டோம். ஆயினும் வெள்ளத்திற்குப் பிறகு அந்தப் பிரசங்க பீடம் திரும்பி கீழே இறங்கி வந்தது, இருக்கைகளும் திரும்பி அவைகள் இருந்த இடத்திற்கே திரும்பி வந்தன. அவைகள் எல்லாவற்றையும் துடைத்து தேய்த்து கழுவ வேண்டியதாயிருந்தது. புரிகிறதா? பார்த்தீர்களா? ஆகையால் நாம் இதை விரும்புகிற விதமாகவே இது அமைந்துள்ளது. இது ஒரு சாதாரண ஜனங்களுக்கான, அற்புதமான ஆண்டவருக்கான ஒரு சாதாரண இடமாய் உள்ளது. ஆமென். 13 இப்பொழுது இன்றைக்கு நாம் சிலவற்றை பார்க்கப் போகிறோம், நாம் மிகச் சிறந்த பாலேடைப் பெற்றுக்கொள்ள துவங்கிக்கொண்டிருக்கிறோம். பாலேடு பாலிலிருந்து எடுக்கப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். நினைவிருக்கட்டும், பாலேட்டை உண்டுபண்ண பால் தேவைப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். பாலேடு என்பது பாலில் உள்ளடங்கியுள்ளது. 14 ஆகையால் நாம் முதலாவது, இரண்டாவது அதிகாரங்களைப் பார்த்து முடித்துவிட்டபடியால், நாம் மூன்றாம் அதிகாரத்தையும் பார்த்து முடித்து விட்டு, மகிமையான எபிரெய புத்தகத்தின் நான்காம் அதிகாரத்தை துவங்கயிருக்கிறோம். ஓ, இந்த புத்தகத்தின் போதனைகள்! நம்மால் ஒரே ஒரு வசனத்தின் பேரில் மூன்று மாதங்கள் தரித்திருந்து, வேதத்தில் உள்ள ஒரு வசனத்தில் முழு வேதமும் இணைகிறதைக் காண்பிக்க முடியும். அதைக் குறித்து நீங்கள் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? உங்களால் ஒரு வசனத்தைக் கூட தவறு என்று சுட்டிக் காட்ட முடியாது, ஏனென்றால் நம்மால் கிருபையினாலும், பரிசுத்த ஆவியின் உதவியினாலும் அதனை ஆதியாகமத்திலிருந்து வெளிப்ப்படுத்தின விசேஷம் வரை இணைத்துக் காட்ட முடியும். 15 வேதாகமத்தைப் போன்று வேறெந்த இலக்கியப் புத்தகமும் இவ்வாறு இணைத்துக் காட்டக் கூடியதாய் எங்குமே எழுதப்பட்டிருக்கவில்லை. வேதாகமத்தைப் போன்று கணித ரீதியாகவும், புவியியல் ரீதியாகவும், ஒவ்வொரு வழியிலும் சரியாக காணப்படுகிற விதமாய் வேறெந்த புத்தகமும் எழுதப்பட்டிருக்கவில்லை. வேதாகமத்தைப் போன்று உலகில் வேறெந்த புத்தகமும் அவ்வாறு எழுதப்படவேயில்லை என்றே நான் பொருட்படுத்திக் கூறுகிறேன். அவ்விதமான ஒன்று கிடையவே கிடையாது. வேதாகமத்தின் எண்ணியல் பரிபூரணமான பொருத்தத்தில் உள்ளது. அதன் அதிகாரங்களும், நிறுத்தற்குறிகளும் மற்றுமுள்ள ஒவ்வொரு காரியமும் கூட பரிபூரணமாயிருக்கின்றன. வேறெந்த புத்தமும் இவ்வாறு கிடையாது. மற்ற புத்தகங்களில் முரண்பாடில்லாமல் எந்த அதிகாரத்தையும் உங்களால் வாசிக்க முடியாது. ஆனால் முழு வேதாகமத்திலும் முரண்பாடு என்ற ஒன்று கிடையவே கிடையாது. இது அநேக, அநேக மனிதர்களால் எழுதப்பட்டது. நூற்றுக்கணக்கான வருடங்களாக தனித்தனியாக எழுதப்பட்டது. ஒருவர் எழுதினதை மற்றொருவர் அறிந்திருக்கவில்லை. ஒருவர் இங்கே அந்த ஒன்றை எழுதினார். ஒருவர் மற்றொன்றை அங்கே எழுதினார். மற்றொன்றை வேறொருவர் இங்கே எழுதினார். அவை யாவும் ஒன்று சேர்க்கப்பட்டபோது, அது தேவனுடைய வேதாகமமானது. ஒன்றுக்கொன்று கணித ரீதியாகவோ, புவியியல் ரீதியாகவோ முரண்பாடாயிருக்கவில்லை. வேதாகமத்தைக் குறித்த எந்தக் காரியமும், ஒவ்வொரு காரியமும், எண்ணியல் மற்றுமுள்ள ஒவ்வொரு காரியமும் பரிபூரண இசைவாய்க் காணப்படுகிறது. எனவே அது ஆவியினால் ஏவப்பட்டதல்லவென்றால் பின்னர் நீங்கள் எதை ஆவியின் ஏவுதல் என்று அழைப்பீர்கள் என்று எனக்குத் தெரியாது. நான் இந்த ஆசீர்வதிக்கப்பட்ட பண்டைய வேதத்திற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 16 அவர்களில் சிலர், "நீர் ஒரு கத்தோலிக்கரா? நீர் ஒரு பிராட்டெஸ்டென்டா?" என்று கேட்டனர். அதற்கு நான், "அவை இரண்டுமே அல்ல. நான் வேதாகமத்தை விசுவாசிக்கிறேன்" என்று கூறினேன். அது உண்மை . நான் வேதத்தை விசுவாசிக்கிறேன். இந்த தேசத்தில் பிரசங்கிக்க நமக்கு இன்னும் சுதந்திரம் உண்டு என்பதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். ஓ, அது அற்புதமானது! 17 இப்பொழுது அதிலிருந்து நாம் ஆய்ந்து படிக்கப்போகிறோம். நாம் எபிரெயர் புத்தகத்திற்கு திரும்பி, 3-ம் அதிகாரத்தில் துவங்குவோம். நாம் பதினைந்தாவது வசனத்தில் விட்டிருந்தோம். இப்பொழுது நீங்கள் எல்லோருமே ... 18 நான் சற்று முன்னர் வாசிப்பதற்கான என்னுடைய மூக்குக் கண்ணாடியை எடுத்தபோது, சிலர் கவனித்துப் பார்க்கிறதை நான் கண்டேன். என்னுடைய கண்கள் மோசமான நிலையில் இல்லை. ஆனால் நான் நாற்பது வயதைக் கடந்துவிட்டேன். சாதாரணமாகவே என்னால் இதை இங்கே வாசிக்க முடியும், ஆனால் மூக்குக் கண்ணாடியைக் கொண்டு இன்னும் சற்று நன்றாக இதை வாசிக்க முடியும். அவர்கள் ஒரு ஜோடி கண்ணாடிகளை வாசிப்பதற்காக எனக்கு தயாரித்துக் கொடுத்துள்ளனர், ஏனென்றால் என்னால் அதன் மூலம் நன்றாகவும், மேலாகவும் வாசிக்க முடியும். அதற்காகத்தான் நான் அவைகளைப் பெற்றுள்ளேன். இப்பொழுது... 19 முதலில் நாம் ஒரு சிறு பிண்ணணியைப் பற்றி பேச விரும்புகிறோம், ஏனென்றால் எபிரெயர் புத்தகத்தின் முதல் பாகத்தை சரிவர கேட்டு அறிந்திராத சில அந்நியர்கள் ஒருகால் நமக்கு மத்தியில் இருக்கலாம். 20 இங்கே மூலையில் அமர்ந்திருப்பது திருமதி.காக்ஸ், நீங்கள் தானே? தேவனுடைய கிருபைக்கென ஒரு சாட்சியை நான் கூறத்துவங்கு முன்னர், நான் அவர்களைக் காண்பதற்காக நிச்சயமாகவே மகிழ்ச்சியடைகிறேன். தன்னுடைய முகத்தை புற்றுநோய் அரித்துப்போட்ட ஒரு ஸ்திரீ இங்கே இருந்தாள். அவள்தான் சகோதரி உட் அவர்களுடைய தாயார். ஒலிப்பதிவு செய்கிற ஜீன் மற்றும் லியோவோடு நான் மிக்சிகனில் இருந்தேன். அப்பொழுது நான் வீடு திரும்பும் வழியில் என் மனைவி என்னை தொலைபேசியில் கூப்பிட்டாள், இல்லை, நான் அவளைத் தொலைபேசியில் கூப்பிட்டேன். அப்பொழுது அவள், "நீங்கள் உடனடியாக திருமதி காக்ஸ் அவர்களுக்கு, திருமதி உட் அவர்களுடைய தாயாருக்கு போய் ஜெபியுங்கள், ஏனென்றால் புற்றுநோய் அவளுடைய முகத்தை அரித்துக் கொண்டிருக்கிறது" என்று கூறினாள். அது கண்ணின் பக்கவாட்டிற்குள் சென்று, பின்னர் அங்குள்ள எலும்பினண்டைக்கு சென்று அரித்து, அவளுடைய முகத்தின் ஒரு பக்கத்தில் பரவியிருந்து, யாரோ ஒரு மருத்துவர் அதற்கு ஏதோ ஒரு காரியத்தை செய்திருந்தார். ஆயினும் அது மிகவும் மோசமாகி அப்படியே பரவிக்கொண்டிருந்தது. அதில் ஏதோ ஒரு விதமான மருந்தினை தடவியிருந்தனர். 21 அவர்களோ கேம்பெல்ஸ்வில்லிருந்து கென்டக்கிக்கு... இல்லை, கென் டக்கியிலுள்ள அக்டன்னிலிருந்து லூயிவில்லுக்கு அவளை சிகிச்சைக்காக கொண்டுவந்தனர். 22 எனவே நான் முதன் முறையாக திருமதி உட் அவர்கள் நிலைகுலைந்து போயிருந்ததைக் கண்டேன், ஏனென்றால் உண்மையாகவே அது அவளுடைய அவளுடையஅவளுடைய தாயாகும். நிச்சயமாகவே அவள் நிலைகுலைந்து போய் விட்ட நிலையில் இருந்ததை உணர்ந்திருந்தாள். எனவே தேவன் ஜெபத்திற்கு பதிலளிப்பார் என்று அவரிடத்தில் நம்பிக்கைக்கொண்டு, அறைக்குள்ளாகச் சென்று, அவளுக்காக ஜெபித்தேன். ஒரு சில நாட்களிலேயே அவள் குணமடைந்துவிட்டாள். அவள் அங்கே இப்பொழுது அமர்ந்திருக்கிறாள். ஆச்சரியமான கிருபையினால், அவர் அவளுக்காக எப்படியாய் அதைச் செய்துள்ளார். 23 நீங்கள் எழும்பி நிற்பீர்களா? அதாவது நான் உங்களை பகிரங்கமாக எழுந்து நிற்கும்படிக்கு... கூற விரும்பவில்லை. எங்கே புற்றுநோய் தங்கியிருந்தது? அங்கே முகத்தின் அந்தப் பக்கத்தில், அங்கே பாருங்கள், அவளுடைய முகத்தின் அந்தப் பக்கத்தில் பரவி, அவளுடைய கன்னத்தின் எலும்பினுள் அரித்து, அவளுடைய கண்ணைச் சுற்றிலும் பரவி அரித்துவிட்டிருந்தது. தேவன் அவளை குணப்படுத்தினார். அவர் அற்புதமானவரல்லவா? (சபையோர், "ஆமென்" என்கின்றனர்.-ஆசி.) 24 கர்த்தர் ஒரு தரிசனத்தின் மூலமாக என்ன செய்தார் என்பதை கடந்த ஞாயிறு இங்கிருந்து எத்தனைபேர் கண்டீர்கள்? ஒரு மனிதன் முடமாயும், குருடாயும் ஒரு சக்கர நாற்காலியில் இங்கே அமர்ந்திருந்தார். அந்த வயோதிக மனிதன் இங்கே அமர்ந்திருந்து, "சகோதரன் பிரான்ஹாம்...'' என்று கூப்பிட்ட போது, ஏதோ ஒரு காரியம் என்னை புண்படுத்தியது. அது இங்கு இருந்த இந்த சகோதரன் தான் என்று நான் நினைக்கிறேன். அவர், "என்னுடைய மனைவிக்காகவும் அதேவிதமாகச் செய்யுங்கள்" என்றார். அவருக்கு முடமான ஒரு மனைவி இங்கே இருந்தாள். அப்பொழுது என் இருதயம் அப்படியே கரைந்து போயிற்று. இந்த உலகத்தில் என்னால் எதைக் கொடுக்க முடிந்தாலும் நான் கொடுத்துவிடுவேன். ஆனால் அதுவோ... என்னுடைய வல்லமையாயிருக்கவில்லை. ஆனால் தேவன் அதைச் செய்ய வேண்டும் என்று ஜெபிக்கும்படியாக என்னுடைய வல்லமையையும், உங்களுடைய வல்லமையையும் முன்வைக்க வேண்டியதாயுள்ளது. அவர் ஒரு முடமான மனைவியை உடையவராயிருந்தார். அவள் செயலிழந்த கரமும், செயலிழந்த ஒரு பாதமுடையவளைப் போலக் காணப்பட்டாள். இந்த மனிதன் அவளைப் பார்க்கிலும் மிகவும் மோசமாக இருந்தான், ஏனென்றால் அவளால் எழுந்து நின்று சற்று நடக்க முடிந்தது. ஆனால் இந்த மனிதனாலோ அதைக் கூட செய்யமுடியாமலிருந்தது. அவன்... அவளுடைய மூளையின் முக்கிய நரம்பு செயலிழந்து போயிருந்தது. மேயோ மருத்துவர்கள், இன்னும் ஏராளமான மற்ற அநேகர் அவளைக் கைவிட்டிருந்தனர். ஒரு கத்தோலிக்கர், ஒரு கத்தோலிக்க மருத்துவர் அவனை இங்கே அனுப்பியிருந்தார்; அவனுடைய மகன் இந்தியானா ஜாஸ்பரில் உள்ள பரிசுத்த மெயின்ராட் என்ற ஆலயத்தில் ஒரு கத்தோலிக்க பாதிரியாராய் இருக்கிறான். ஆனால் அதுவோ அங்கே அந்த எழுப்புதல் உண்டாவதற்கான அஸ்திபாரக் கற்களாய் அமைந்துள்ளன. 25 அவன் எழும்ப முயற்சித்த போது, அவன், "என்னால் எழும்ப முடியவில்லையே...'' என்றான். பின்னர் மேல் நோக்கிப் பார்த்துவிட்டு, "ஆம், என்னால் முடியும்" என்றான். அவனால் பார்வையடைந்து காண முடியாது என்றே அவன் எண்ணிக் கொண்டான் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவன் மேல் நோக்கிப் பார்த்து, அவனுடைய தலையை உயர்த்த நேர்ந்தபோது, அப்பொழுது அவனால் நடக்கவும் பார்க்கவும் முடிந்தது. அவன் தானாகவே அந்த கூடாரத்தில் இடைப்பட்ட நடைபாதையில் நடந்து சென்றான். அவர்களோ பிரெஸ்பிடேயரியன்களாய் இருந்தனர். அவன் வைதீக சபை அங்கத்தினனாயிருந்தான். பேச... பெந்தேகோஸ்தேக்கள் அல்லது பரிசுத்தம் என்ற ஸ்தாபன ஜனங்களால் மாத்திரமே சத்தமிட முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அவர்களால் அந்த விதமான ஏதோ ஒரு காரியம் சம்பவிப்பதைக் காணும்போது மட்டுமே நிச்சயமாகவே அவர்களால் சத்தமிட முடியும், அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் கட்டித்தழுவி சத்தமிடுகிறார்கள். அந்த முடமான குருடனோ எழுந்து தன்னுடைய சக்கர நாற்காலியை படிகளில் தள்ளிக்கொண்டு நடந்து சென்றான். அவனுடைய தலையில் இருந்த நரம்பு செயலிழந்து போயிருந்தும், எழுந்து நடந்தான். அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். உங்களைப் போல் அல்லது நான் நடப்பது போல் நடந்தான். ஓ, அவர் அற்புதமானவராயிருக்கிறார். 26 இப்பொழுது, பவுல் இந்த எபிரெயரின் புத்தகத்தை எழுதினான். எபிரெயருக்கு இதை எழுதினதில், அவன் இதை எழுதினான். அவன் இந்த புத்தகங்களை எழுதுவதற்கு முன்னர். நாம் இப்பொழுது கண்டறிகிறோம். நாம்... இது ஒரு ஞாயிறு வேதபாட பள்ளியாய் உள்ளது, எனவே நான் நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளாதபடிக்கு கவனித்துக் கொள்ள முயற்ச்சிப்பேன். அதன்பின்னர் கர்த்தருக்குச் சித்தமானால் நாம் அவைகளை இன்றிரவு ஆராதனையிலும் தொடர்ந்து பேசப்போகிறோம். இப்பொழுது எபிரெய புத்தகத்தில், பவுல் எழுதின மற்ற நிருபங்களில்.... 27 பவுல் யாராயிருந்தான்? அவன் ஒரு தீவிர நம்பிக்கைக் கொண்டிருந்த எபிரெயனாய், ஒரு வேத பண்டிதனாய், பழைய ஏற்பாட்டின் ஒரு மகத்தான உபாத்தியாயனாய் இருந்தான். அவன் தன்னுடைய நாளின் மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவரால் கற்பிக்கப்பட்டிருந்தான். அவருடைய பெயர் என்ன என்பதை யாராவது எனக்குச் சொல்லுங்கள். கமாலியேல், பவுலினுடைய நாளின் மகத்தான வேத ஆசிரியர்களில் ஒருவர். பவுல் கமாலியேலின் பாதத்தினருகே அமர்ந்து கற்றிருந்தான். 28 நீங்கள் எங்கே போகிறீர்களோ, நீங்கள் எந்த சபைக்குப் போகிறீர்களோ, போதகர் உங்களுக்கு என்ன போதிக்கிறாரோ... அதைக் குறித்த ஏதோ ஒரு காரியம் உண்டு. நீங்கள் அதை அறிந்துள்ளீர்களா? அதில் ஏதோ ஒரு காரியம் உண்டு. ஆகையால் நம்மால் கண்டறிய முடிந்த மிகச் சிறந்ததையே நாம் தேட வேண்டும், எனவே நாம் மிகச் சிறந்ததையே பெற்றுக்கொண்டிருக்கிறோமேயன்றி, சமுதாய பழக்கத்திற்குகந்ததையல்ல, ஆனால் உண்மையான வேதாகம போதனையே பெற்றுக் கொண்டிருக்கிறோம். 29 பாருங்கள், இஸ்ரவேலர் ஒரு சமயம் தங்களுடைய சேனைகளோடு வனாந்திரத்திற்குள் சென்றிருந்தனர். அவர்கள் அங்கே ஏழு நாள் சுற்றித் திரிந்தபோது, அவர்களுக்கு தண்ணீர் இல்லாமற் போயிற்று. அவர்கள் கிட்டத்தட்ட அழிந்து போவதாயிருந்தனர், எனவே அப்பொழுது அவர்கள், "ஓ, இங்கே எங்காவது அருகில் ஒரு தீர்க்கதரிசி இருக்கிறாரா?" என்று கேட்டனர். 30 அப்பொழுது அவர்களில் ஒருவன், "எங்களிடத்தில் இங்கே எலிசா என்பவன் இருக்கிறான். அவன் எலியாவின் கைகளுக்குத் தண்ணீர் வார்த்தான்" என்றான். அவனுடைய கூட்டாளிகளைப் பார்த்தீர்களா? வேறு வார்த்தைகளில் கூறினால், "இங்கே எலியாவோடு இணைந்து தொடர்பு கொண்டிருந்த எலிசா இருக்கிறான். கர்த்தருடைய வார்த்தை அவனிடத்தில் உள்ளது" என்பதாகும், உங்களுக்கு அது புரிகிறதா? அவன் சரியாக போதிக்கப்பட்டிருந்தான். அப்பொழுது அவன், "அவன் இங்கே இருக்கிறான். நாம் அங்கே போய் அவனிடத்தில் கலந்தாலோசிப்போம், ஏனென்றால் அவனுடைய போதகர் எலியாவாய் இருந்தார். எனவே அவன் எலியாவின் போதகத்தை தனக்குள் பெற்றிருக்கிறான்." என்றான். அது என்ன ஒரு வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது என்று பார்த்தீர்களா? நிச்சயமாக நாம் போதிக்கப்பட வேண்டும். 31 ஆகையால் பவுல் கமாலியேலின் போதகத்தை உடையவனாயிருந்தான். கமாலியேல் தேர்வாற்றல் செய்து பார்க்கக் கூறின் அந்த மகத்தான மனிதனாய், ஒரு வேதபண்டிதனாய் இருந்த காரணத்தால், ஆதி சபையில் துவங்கின. இந்த எல்லாக் காரியங்களிலும் உடனிருந்து, "நாம் அந்த சகோதரர்களின் பேரில் கைபோடாதிருப்போமாக. அது தேவனால் உண்டாயிருக்கவில்லையென்றால், அது எப்படியாயினும் ஒன்றுமில்லாததாகிவிடும். ஆனால் அது தேவனால் உண்டாயிருந்ததானால், நாம் அதற்கு எதிராகப் போரிடும்போது, நாம் தேவனுக்கு எதிராக போர் செய்கிறவர்களாய்க் காணப்படுவோம்" என்றான். பாருங்கள், அவன் நல்ல சில போதனைகளை உடையவனாயிருந்தான். 32 பவுல் இந்த மனிதனின் கீழிருந்து உருவாகியிருந்தான், பவுல் ஒரு மகத்தான போதகனாயிருந்தான் என்பதை அவன் அறிந்திருந்தான். ஆகையால் ஒரு நாள் தன் இருதயத்தில் உத்தமத்தோடு சபையைத் துன்பப்படுத்தி, அவர்களைக் கைது செய்ய சென்று கொண்டிருந்தான். 33 நாம் நம்முடைய பிண்ணணியைக் கற்றுணர்கையில், இப்பொழுது நாம் அப்படியே பவுலினிடத்திலிருந்து ஏற்பட்டிருந்த மற்றொரு சிறிய வளர்ச்சிப்படியினை நாம் எடுத்துக் கொள்வோம். 34 யூதாஸ் அக்கிரமங்களினாலே, பண ஆசையினாலே, ஜீவனத்தின் பெருமையினாலே, விழுந்து போனான். அவன் கிருபையிலிருந்து விழுந்து, தன்னுடைய இடத்திற்குச் சென்றான். அப்பொழுது சீஷர்களோ, "பன்னிரண்டு பேர் இருக்க வேண்டும்" என்றார்கள். சபையானது அதனுடைய எல்லாத் தகுதியோடிருந்தும், சபை என்னவாய் இருக்கிறது என்பதை உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். சபையானது அதனுடைய எல்லாத் தகுதியோடும், அதனுடைய எல்லா வல்லமையோடுமிருந்தும், அது இன்னமும் அதனுடைய மிகச் சிறந்த நிலையில் கோடிக்கணக்கான மைல்கள் வித்தியாசத்தில் எதிர்பார்த்ததைவிடக் குறைவுற்ற நிலையிலேயே உள்ளது. அவர்கள், "நமக்கு மத்தியிலே யார் அந்த ஸ்தானத்தை வகிக்கப் போவது என்பதைக் குறித்து நாம் தேர்ந்தாராய வேண்டும்" என்றனர். எனவே அவர்கள் சீட்டுப் போடுவதன் மூலம் மத்தியாஸைத் தேர்ந்தெடுத்தனர். மத்தியாஸ், இல்லை மத்தியா என்றே நான் நினைக்கிறேன். அது மத்தியா என்று தான் நான் நினைக்கிறேன். அவர்கள் அவனை தேர்ந்தெடுத்து பதினோரு பேரோடு சேர்ந்துகொண்டபோது, அப்பொழுது அது மீண்டும் பன்னிரண்டாகிவிட்டது. ஆனால் அவனோ ஒரு காரியத்தையும் செய்யவில்லை. அந்த ஒரே முறைதான் அவனுடைய பெயர் வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது சபையானது தன்னுடைய தெரிந்துகொள்ளுதலைச் செய்ததாயிருந்தது. 35 இப்பொழுது, அவர்களோ, "அவன் ஒரு நற்பண்பு கொண்ட மனிதன்" என்று எண்ணினர். அதில் சந்தேகமேயில்லை . மேலும், "அவன் ஒரு அற்புதமான மனிதன். அவன் ஒரு மேதை. அவன் ஒரு புத்திமான். அவன் ஒரு கல்வியறிவு பெற்றவன். அவன் ஒரு அற்புதமான நபர். அவன் யூதாஸின் இடத்தை எடுத்து, நம்மில் ஒருவனாயிருப்பான்" என்றனர். 36 ஆனால், தேவன் சில சமயங்களில் நம்முடைய அபிப்பிராயத்திற்கும், சில மிக முட்டாள்தனமான தெரிந்து கொள்ளுதல்களுக்கு மாறான. சிலவற்றைச் செய்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது, தேவன் ஒரு சிறிய கொக்கி மூக்கு யூதனை, கோபத்தால் நிறைந்து, "நான் அங்கு போய், அவர்கள் ஒவ்வொருவரையும் கைது செய்வேன். நான் நான் அவர்களை சிறையில் போடுவேன். நான் இதைச் செய்வேன்" என்று தன்னுடைய வாய்மொழியாக கூறினவனையே கண்டு தெரிந்துகொண்டார். அது தேவனுடைய தெரிந்துகொள்ளுதலாய் இருந்தது. ஆனால் மற்றவர்களோ ஒரு மேதையையும், ஒரு இராஜதந்திரியையுமே தெரிந்துக் கொண்டனர். அதுவே சபையினுடைய தெரிந்துகொள்ளுதல் ஆகும். 37 பாருங்கள், பீடத்தண்டையில் யார் உள்ளது என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லை. நீங்கள் சாட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறது யார் என்றும், சிறைச்சாலையில் இருக்கிறது, அல்லது அது என்னவாயுள்ளது என்று நீங்கள் அறிந்து கொள்ளுகிறதில்லை. அவன் ஒரு குத்துச் சண்டைக்காரனைப் போல், அவனுடைய காதுகள் மடிந்து, கண்கள் குழிவிழுந்து காணப்படலாம். ஆனால் அது யார் என்பதை நீங்கள் அறிந்துக்கொள்ளவில்லை. நீங்கள் உங்களுடைய சீட்டுப் போட்டு, அந்த வார்த்தையை அவனுக்குக் கூறினீர்கள், அவ்வளவுதான். தேவனே, தெரிந்துகொள்ளுதலைச் செய்கிறார். 38 தேவன் இந்த மிகுந்த கோபக்காரனான சிறிய யூதனை, இல்லை சரியாகக் கூறினால், அவனைத்தான் தெரிந்துகொண்டார். அவன் தன்னுடைய பாதையில் செல்லும்போது, "நான் அங்கே போய், அவர்களைப் பிடிப்பேன். என்னால் என்ன செய்யமுடியும் என்பதை நான் நான் அவர்களுக்குக் காண்பிப்பேன்" என்று கூறினான். அப்பொழுது தேவன் அவனை கீழே விழத்தள்ளினார். தேவன், "அதுதான், அங்குதான் என்னுடைய தெரிந்து கொள்ளுதல் உள்ளது" என்றார். 39 அதுவோ சபைக்கு முட்டாள்தனமாயிருக்குமல்லவா? "ஏன்? அவன் சபையைத் துன்பப்படுத்துகிறான். அவன் ஒரு மாம்சபிரகாரமான மனிதனாயிருக்கிறான். ஆனால் அந்த மனிதனின் உட்புறத்தில் என்ன இருந்தது என்பதை தேவன் அறிந்திருந்தார். நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்பது புரிகிறதா? 40 ஆகையால், பவுல் ஒரு அனுபவத்தை உடையவனாயிருந்தான். மனமாற்றத்தின் மூலமாகவே அனுபவம் உண்டாகிறது என்பதை எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? நிச்சயமாக. அது அவ்வாறு இருக்கவில்லையென்றால், நான் மனமாற்றத்தைக் குறித்தே சந்தேகப்படுவேன். ஒரு மனமாற்றம் அனுபவத்தைக் கொண்டு வருகிறது. நீங்கள் அதை இப்பொழுது எந்தக் காரியத்திற்கும் பிரித்திட முடியாது. சில சமயங்களில் அது சத்தமிடுதலாய் இருக்கலாம். சில சமயங்களில் அது அந்நிய பாஷைகளில் பேசுவதாய் இருக்கலாம். சில சமயங்களில் அது அழுவதாய் இருக்கலாம். சில சமயங்களில் அது முனுகுதலாய் இருக்கலாம். அது என்னவென்பது உங்களுக்குத் தெரியாது, ஆகையால் அதைப் பிரித்திட முயற்ச்சிக்காதீர்கள். ஏனென்றால் நீங்கள் ஒவ்வொருவரும் நீங்கள் மெத்தோடிஸ்டுகள், நீங்கள் பாப்டிஸ்டுகள், நீங்கள் நசரேயன்கள், பெந்தேகோஸ்துக்கள் என அதில் தவறாயிருப்பதை நிரூபித்திருக்கிறீர்கள். 41 ஜனங்கள் அவர்களால் முடிந்தளவு துதித்து சத்தமிடுவதையும், அதே சமயத்தில் அவர்களால் முடிந்தால் உங்களுடைய தங்கப் பல்லையே களவாடக் கூடியவர்களாயிருப்பதையும் நான் கண்டிருக்கிறேன். ஆம் ஐயா. ஜனங்கள் காய்ந்துபோன ஒரு பசுமாட்டுத் தோலின் மேல் பட்டாணிகளை கொட்டும்போது ஏற்படும் ஓசையைப்போல், அந்நிய பாஷைகளைப் பேசுவதையும், அதே சமயத்தில் வாயின் மறுபக்கத்தில் புகையிலையை வைத்துக்கொண்டு மெல்லுவதையும், அவர்கள் கூடுமானால் உங்களுடைய தொண்டையைத் துண்டித்து போடுமளவிற்கு இருப்பதையும் நான் கண்டிருக்கிறேன் என்று நேர்மையான உத்தமத்தோடு கூறுகிறேன். அது உண்மையே. ஆகையால் அந்தக் காரியங்களெல்லாம். உங்களால் நிரூபிக்க முடிந்த அத்தாட்சியாயிருக்கவில்லை, ஆனால் ஒரு நபர் ஜீவிக்கிற ஜீவியத்தின் மூலமே அதை நிரூபிக்க முடியும். "அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.'' 42 ஆகையால் அவையாவும் தேவனைப் பொறுத்ததாயுள்ளது. அவரே ஒரு தெரிந்துகொள்ளுதலைச் செய்கிறார். அவர் காரியங்களை ஒன்று சேர்த்து கொண்டுவருகிறார். அந்த விதமாகத்தான் அது உள்ளது. ஆகையால் உங்களுடைய ஜீவியம் வேதாகமத்தின் கனிகளோடு ஒப்பிடப்படுமேயானால், அப்பொழுது நீங்கள் ஒரு நல்ல அழகான எண்ணத்தைப் பெற்றுக்கொள்வீர்கள். நீங்கள் தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாயிருக்கிறீர்கள் என்று உங்களுடைய ஆவியானது அவருடைய ஆவியோடு சாட்சி பகர்ந்துக்கொண்டிருக்குமேயானால் நலமாயிருக்கும், நீங்கள். அப்பொழுது எல்லா பொல்லாத பழைய காரியங்களும் ஒழிந்துபோய், ஒவ்வொரு காரியமும் புதியதாகி, நீங்கள் அன்பில் ஜீவித்துக் கொண்டு, நீங்கள் சமாதானம், கிருபை போன்றவற்றைப் பெற்று, நீங்கள் தேவனுடைய இராஜ்ஜியத்தை நேர்த்தியாய் நெருங்கிக்கொண்டிருக்கிறீர்கள். ஏனென்றால் உங்களுக்குள்ளாக இருக்கிற ஜீவன் அந்தவிதமான ஒரு ஜீவியத்தை தோற்றுவித்துக்கொண்டிருக்கிறது. புரிகிறதா? 43 நீங்களோ, "ஓ, அல்லேலுயா, நான் அந்நிய பாஷையில் பேசினேன். அல்லேலூயா" என்று கூறலாம். அது எந்த ஒரு காரியத்தையும் பொருட்படுத்துகிறதில்லை. நீங்கள் வெளியே போய் ஒரு வீணையில் அல்லது ஏதோ ஒன்றில் ஒரு ராகத்தை இசைப்பது போன்று அது ஒரு காரியத்தையும் பொருட்படுத்துகிறதில்லை. அது ஒரு காரியத்தையும் பொருட்படுத்துகிறதில்லை. நீங்கள் அந்நிய பாஷையில் பேசியிருந்தாலும், நீங்கள் சத்தமிட்டிருந்தாலும், நடைபிரகாரத்தில் மேலும் கீழும் ஓடினாலும், நீங்கள் வெங்காயம் உரித்திருந்தது போன்று கண்ணீர் வடித்திருந்தாலும், அது அனுதின ஜீவியத்தை சரிவர ஆதரித்து, அதனோடு தரித்திருந்தாலொழிய அது எந்த ஒரு காரியத்தையுமே, எந்த ஒரு காரியத்தையுமே பொருட்படுத்து கிறதில்லை. 44 இப்பொழுது, நீங்கள் அந்தக் காரியங்களைச் செய்து, அந்த ஜீவியம் "ஆமென்" என்று கூறுமேயானால், அது அருமையானது. அது நல்லது. ஆனால் உங்களால் அந்த ஜீவனைப் பெற்றுக்கொள்ளாமல் அந்தக் காரியங்களைச் செய்ய முடியும். 45 ஆகையால் சத்தமிடுதலோ அல்லது அதைப் போன்ற எந்தக் காரியமும் அத்தாட்சியாயிருக்கவில்லை. இயேசு, "அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்" என்றார். ஆவியின் கனி அந்நிய பாஷையில் பேசுவதல்ல. அது ஆவியின் கனியல்ல. சத்தமிடுதல் ஆவியின் கனி அல்ல. புலம்பி அழுதல் இந்த ஆவியின் கனி அல்ல. ஆனால் அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் இவைகளே ஆவியின் கனிகளாகும். புரிகிறதா? அவைதான் ஆவியின் கனிகளாயிருக்கின்றன. சரி. 46 இப்பொழுது நீங்கள் பாருங்கள், நாம் இந்தக் காரியங்களைப் பெற்றுள்ளதற்கான காரணம், அவர்கள் ஸ்தாபனங்களை ஏற்படுத்த விரும்புகின்றனர். எனவே அவர்கள் "நல்லது, நாம் அதைப் பெற்றுக்கொள்வோம். தேவனுக்கு ஸ்தோத்திரம், நாங்கள் விசுவாசிக்கிற விதமாகவே எல்லோரும் விசுவாசிக்கிறார்கள். நாங்கள் இந்த விதமாக செல்வோம். நாங்கள் விசுவாசிக்கிற விதமாகவே எல்லோரும் விசுவாசிக்கிறார்கள், நாங்கள் இந்தவிதமாக செல்வோம்" என்கிறார்கள். ஆனால் தேவன் எல்லோருமே இந்த வழியாக மேலே செல்ல விரும்புகிறார். 47 இப்பொழுது பவுல், அவன் இந்த அனுபவத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு, அப்பொழுது அது ஒரு அற்புதமான அனுபவமாயிருந்தது என்று அவன் எண்ணிக்கொண்டான். இப்பொழுது... எப்படி... நாம் அந்த அனுபவத்தை சற்று மேற்கோள் காட்டுவோமாக. சுவிசேஷம் தமஸ்குவிலே பரவியிருந்த காரணத்தால், பவுல் தமஸ்குவிலிருந்த சில ஜனங்களை கைது செய்ய, தமஸ்குவிற்கு செல்லும் தன்னுடைய பாதையில் இருந்தான். சுவிசேஷம் என்பது "நற்செய்தி" என்று பொருள்படுகிறது. எனவே அவர்கள் அங்கே சுவிசேஷத்தைப் பரப்பியிருந்தனர், ஆகவே அநேக ஜனங்கள் முழுமையான அன்போடும், சந்தோஷத்தோடும், கர்த்தராகிய இயேசுவை நேசிக்கின்றவர்களாய் உருவாகிக்கொண்டிருந்தனர். அது அந்த விதமாக அங்கே பரவியிருந்தது. ஆகையால் பவுல் பிரதான ஆசாரியரிடத்திலிருந்து சில கடிதங்களைக் கேட்டுப் பெற்றிருந்தான். எனவே அவன், "நான் அங்கு போய், அவர்கள் ஒவ்வொருவரையும் கைது செய்வேன்" என்றான். 48 ஆகையால் அவன் ஒரு சிறு கூட்ட காவலர்களையும், ஆலயக் காவலர்களையும், போர்வீரர்களையும் கூட்டிக்கொண்டு அவன் சென்ற சாலையில் சென்றான். அவர்கள் வீதியிலே பவனி சென்று கொண்டிருந்தபோது, அவன் என்ன செய்யப் போகிறான் என்பதை எல்லோரும் அறிந்திருந்தனர், அப்பொழுது திடீரென்று ஏதோக் காரியம் சம்பவித்தது. திடீரென்று ஒரு பெரிய வெளிச்சம் அவனுக்கு முன்பாக இருந்தது. மகத்தான வெளிச்சம். அதுவோ சூரியனைப் போன்று பிரகாசித்தது. அது ஒரு விநோதமான காரியமாய் சம்பவித்தது. அந்த வெளிச்சம் அதிகமாய்ப் பிரகாசித்தது... அவனுடைய கண்பார்வை ஏறக்குறைய பறிப்போயிற்று. அவன் தரையிலே விழுந்தான். அவன் தரையில் விழுந்து கிடந்தவனாய், மேல் நோக்கிப் பார்த்தான். 49 அப்பொழுது அவனோடு அநேகமாக பத்து அல்லது பதினைந்து மனுஷர் இருந்தனர். அந்த மனிதர்களில் எவராவது அந்த ஒளியைக் கண்டிருந்தார்களா? இல்லை ஐயா. பவுல் அதைக் கண்டான். அவர்கள் அந்த ஒளியைக் காணும்படி நியமிக்கப்பட்டிருக்கவில்லை. எனவே சில ஜனங்கள் காண முடிகிற காரியங்களை, மற்றவர்கள் காண்கிறதில்லை. புரிகிறதா? ஆகவே பவுல் அந்த ஒளியைக் கண்டான், அது அவனை அவ்வளவாய் குருடாக்கினது. அதன்பின்னர் அவனால் பல நாட்கள் காண முடியவில்லை, அது அவனுக்கு அப்பேர்ப்பட்ட ஒரு உண்மையாய் இருந்தது. ஆனால் அவனால் பல நாட்களாக... காண முடியாமற் போயிற்று. பின்னர் அவன் நிருபங்களை எழுதினபோது, அவன் அந்த நிரூபங்களை பெரிய எழுத்துக்களில் எழுதுமளவிற்கு அவனுடைய கண்கள் அந்த ஒளியைக் கண்டதிலிருந்து அவ்வளவாய் அவனுக்கு தொல்லை கொடுத்திருந்தன. அவன், "என் கையெழுத்தாய் எவ்வள்வு எழுதினேனென்று பாருங்கள்" என்றான். அவனால் சரிவர காண முடியாமலிருந்தது. 50 அவன் சிறையிலிருந்தபோது, கர்த்தர் அவனை அதிலிருந்து குணப்படுத்தும்படி வேண்டினான். அவன் மூன்று முறை அவரிடத்தில் வேண்டிக்கொண்டான். ஆகையால் கர்த்தர் என்னக் கூறினார்? "பவுலே, என் கிருபை உனக்குப் போதும்.'' 51 பவுல், "அப்படியானால் நான் என் பலவீனங்களைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்" என்றான். ஏனென்றால் அவன், "அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதப்படிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது" என்றான். அவன் சில காலம் நன்றாக இருப்பான், பின்னர் அவை மீண்டும் அவனை துன்புறுத்தும். குட்டுதல் என்பது, "அடிக்குப் பின் அடி" என்றே பொருள்படுகிறது. சமுத்திரத்தின் மேலுள்ள கப்பலைப் போன்றே, உங்களுக்குத் தெரியும், அலைகள் கப்பலின் மேல் மோதியடிக்கின்றன், பாருங்கள், அடிக்குப் பின் அடி என்பதாகும். அவன் கொஞ்சம் சுகமடைவான், பின்னர் அது மீண்டும் உண்டாகும்; அதன்பின்னர் மீண்டும் சுகம் பெறுவான், அது மீண்டும் உண்டாகும். அப்பொழுது அவன், "கர்த்தாவே, காரியம் என்ன? நீர் இதை என்னிடத்திலிருந்து எடுத்துப் போட மாட்டீரா?'' என்று கேட்டான். 52 அதற்கு அவரோ, "பவுலே, என் கிருபை உனக்குப் போதும். அது அப்படியே காத்துக் கொள்ளும்" என்றார். அது காத்துக் கொள்ளும்... 53 அப்பொழுது அவன், "இப்பொழுது நான் பரிபூரணமா யிருந்திருந்தால், ஒவ்வொரு காரியமும் பரிபூரணமாயிருந்திருந்தால், அப்பொழுது நான் அவ்வாறு இருக்கும்போது, ஓ, நான் இறுமாப்படைந்து, 'நீங்கள் பாருங்கள், என்னிடத்தில் எந்தத் தவறும் இல்லை. சகோதரனே, கர்த்தர் என்னை கவனமாகப் பாதுகாத்துக் கொள்கிறார். அல்லேலுயா" என்று கூறுவேன் என்றான். அப்பொழுது நீங்கள் சுய நீதியையே பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். 54 உங்களுக்குத் தெரியுமா, எப்பொழுதாவது ஒரு முறை உங்களை சற்று ஒரு விதமான அடக்கத்துடன் வைத்திருக்க, தேவன் உங்களுக்கு ஒரு சிறிதான ஏதோ ஒன்றைக் கொடுக்க வேண்டும். அது உண்மை. அப்பொழுது அவர் எஜமானாயிருக்கிறார் என்பதை அது ஒருவிதமாக உங்களை தெளிவாக உணரச் செய்கிறது. ஓ, அவர் அற்புதமானவரல்லவா? ஆம், ஐயா, மகிமை! 55 ஆகையால், அவன், பவுல் இந்த மகத்தான அனுபவத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு... அதன்பின்னர்... 56 இப்பொழுது, அது இன்றைக்கு வேறு யாராவதாக இருந்திருந்தால், அப்பொழுது அவர்கள், "ஓ, தேவனுக்கு ஸ்தோத்திரம், அல்லேலூயா, பையனே, கர்த்தர் எனக்காக ஏதோ ஒரு காரியத்தை செய்திருக்கிறாரே! தேவனுக்கு மகிமை!'' என்று கூறுவார்கள். ஆனால் பவுல் அவ்வாறு கூறவில்லை . அவன் ஒரு வேத பண்டிதனாயிருந்தான். 57 அந்த அனுபவம் தேவனுடைய வார்த்தையோடு பொருந்த வேண்டும். ஆம் ஐயா. அது ஒன்று சேர்ந்து வேதாகமத்திற்குள்ளாக இணைக்கப்பட்டிருக்கவில்லையென்றால்... வெறுமென இவ்விதமாக நோக்கிப்பார்த்து, "ஓ, ஆம், இதோ அது இங்கே உள்ளது, தேவனுக்கு ஸ்தோத்திரம், நான் அதைப் பெற்றுக்கொண்டேன்" என்று கூறுவதல்ல. ஹு ஹூ, தேவன் அதைத் தருகிற விதம் அதுவல்ல. 58 அது முழு வேதமாய் இருக்க வேண்டும். அதைக் குறித்த யாவுமே. ஏனென்றால், நீங்கள்... நாத்திகர்கள் தங்களுடைய காரண காரியங்களை விவாதிக்க இந்த வேதாகமத்தை விவாதிக்கிறார்கள். ஆனால் அவர்கள் இங்கு ஒரு சிறு வேதப்பகுதியை எடுத்து, பின்னர் இங்கே அதைத் திருப்பி, மற்ற சிறிய ஒன்றை இங்கே எடுத்து, அவைகளை ஒன்றாக இணைக்க முயற்ச்சிக்கிறார்கள். அது ஒன்று சேர்ந்துள்ள இரண்டு வித்தியாசமான பொருளாய் உள்ளது. ஆகையால், நீங்கள் வேதவாக்கியத்தை, வேதவாக்கியத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். 59 ஏசாயா 28-ம் அதிகாரத்தில் கூறினது போன்று, "அது பிரமாணத்தின்மேல் பிரமாணமாய், பிரமாணத்தின் மேல் பிரமாணமாய்; இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாய் இருக்க வேண்டும்" என்கிறார்கள். "நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்.'' பாருங்கள், அந்த விதமாகவே அது வருகிறது; பிரமாணத்தின் மேல் பிரமாணமும், வார்த்தையின் மேல் வார்த்தையும், வேதவாக்கியத்தின் மேல் வேதவாக்கியமும் என்றவாறு அவை யாவும் ஒன்று சேர்த்து தொகுக்கப்பட வேண்டும். அதனால் தான் இவைகளைப் போன்ற பாடங்களில் நாம் அவைகளை இப்பொழுது உடையவர் களாயிருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். இதுவோ சபைக்கு ஒரு மகத்தான காரியமாய் உள்ளது, ஏனென்றால் இது எல்லா வேதவாக்கியங்களையும் ஒன்று சேர்த்து இணைக்கிற ஒரு இடத்திற்கு அவைகளைக் கொண்டு வருகிறது; நம்முடைய அனுபவம் அந்த வேதவாக்கியத்தோடு இணைந்திருக்க வேண்டும். ஓ, இதோ அது உள்ளது! அது அவ்வாறில்லையென்றால், அப்பொழுது அது தவறாயுள்ளது. 60 அந்த ஒளியே பவுலை கீழே விழத்தள்ளிற்று என்பதை அறியாமல் எத்தனை வருடங்கள் நான் சஞ்ஞரித்து வந்துள்ளேன். வெளிப்புற உலகத்தில், வேதவாக்கியங்கள்... ஜனங்களும், பிரசங்கிமார்களும், "அது பிசாசு. ஏன்? நீர் ஒரு குறி சொல்பவராயிருப்பீர். நீர் மரித்தோரின் ஆவிகளோடு தொடர்புகொள்ளும் ஒருவராயிருப்பீர். எனவே பில்லி, நீர் அதனோடு நேரத்தை வீணாக்க வேண்டாம். ஏதோக் காரியம் அதனோடு தவறாயுள்ளது. பையனே, நீர் அதைச் செய்ய வேண்டாம். அது தவறானதாயுள்ளது. அது பிசாசாய் உள்ளது. பையனே, நீ வழக்கமான மரித்தோரின் ஆவியுலக இடையீட்டாளராயிருப்பீர். நீர் அதனோடு தொடர்பு கொண்டால், அப்பொழுது நீர் மரித்தோரின் ஆவிகளோடு தொடர்பு கொள்பவராயிருப்பீர். ஓ, அது முற்றிலும் பிசாசாயுள்ளது. அது சரியல்ல" என்றே என்னிடத்தில் கூற முயற்ச்சித்தனர். ஆனால் அப்பொழுது... நான் அதனைப் பிரசங்கிக்க விரும்பவில்லை . 61 ஆனால் பவுல் தமஸ்குவிற்கு போகும் வழியில் நடந்ததைக் குறித்து சரியா அல்லது தவறா என்று அவன் கண்டறியும் வரை, அதைக் குறித்து அவன் பிரசங்கிக்க விரும்பவில்லை. எனவே அவன் அரேபியாவிற்குச் சென்று மூன்று வருடங்கள் தங்கியிருந்து வேதத்தை ஆராய்ந்து படித்தான். ஆ! அவன் அங்கிருந்து வெளியே வந்தபோது, "இப்பொழுது அதை என்னிடத்திலிருந்து அசைத்துக் காட்டுங்கள்" என்று அவனே கூறினான். 62 அவன் பரிசேயர்களை சந்திக்க வேண்டியதாயிருந்ததை அறிந்திருந்தான். அவன் சதுசேயர்களை சந்திக்க வேண்டியதாயிருந்தது. அவன் உலகத்தை, புறஜாதி உலகத்தை சந்திக்க வேண்டியதாயிருந்தது. ஆகையால் பவுல், இந்த வேதம் எழுதப்பட்டதும், இந்த எபிரெயப் புத்தகம் அந்த நோக்கத்திற்காகவே எழுதப்பட்டுள்ளது. எனவே அவன் அந்த எபிரெயர்களை அசைத்து, பழைய ஏற்பாட்டை எடுத்துக்கொண்டு அது இங்கே புதிய ஏற்பாட்டில் இருப்பதைக் காண்பித்தான். அவன், "இது தேவன்" என்றும், "இது இங்கே எல்லா தீர்க்கதரிசிகளின்மேலும் மற்றுமுள்ள ஒவ்வொருகாரியத்தின் மேலும் உள்ளது' என்றும் கூறினான். அவன் அங்கே ஆரம்பத்தில் துவங்குகையில், நாம் பார்த்திருந்த முதலாம் அதிகாரத்தில், "பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகை வகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன்" என்றே கூறியுள்ளான். அந்த விதமாகத்தான் தேவன் தம்முடைய செய்தியை கொண்டுவந்து, ஊரீம் தும்மீம் மூலமாக பரிசோதித்தார். "ஆனால் இந்தக் கடைசி நாட்களில் தம்முடைய குமாரன் இயேசு கிறிஸ்து மூலமாய் நம்க்குத் திருவுளம் பற்றினார்," அதை தம்முடைய வேதாகமத்தின் மூலம் பரிசோதித்தார். அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. 63 ஆகவே உலகமானது இந்த அனுபவங்களை, "ஓ, இது பைத்தியம், ஏன்? எவருமே. இவ்வாறு இல்லையே" என்று கூறுகிறது. நான் என்னுடைய முதல் எழுப்புதலில் இங்கே உள்ள அந்த மூலையில் பிரசங்கித்துவிட்டு, நாம் அந்த ஜனங்கள் எல்லோருக்கும் ஞானஸ்நானம் கொடுத்தபோது... அந்த தூதன் பிரசன்னமானார், அந்த ஒளி இங்கே ஆற்றண்டை இறங்கி வந்தது. அப்பொழுது சகோதரன் பிளீமேன் நீங்கள் அங்கிருந்திருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் அப்பொழுது அங்கே இருந்தீர்களா அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆற்றண்டையிலே அந்த ஒளி பிரசன்னமானபோது அங்கிருந்தவர்களில் எத்தனைபேர் இங்கே இருக்கிறீர்கள்? பழங்காலத்தவர் எவரேனும் இங்கிருக்கிறார்களா? ஆம். அவர்களில் சிலர் இருக்கிறார்கள். அந்த ஒளி ஆற்றண்டை இறங்கி வந்த போது இருந்தவர்கள். 64 அவர்கள், "அது வெறுமென கண்ணுக்குப் புலப்படுகிற மாயையான தோற்றம்" என்றனர். அது இறங்கி வந்த போது, நம்மில் அநேகர் நின்று அதனை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தோம். அதன் பின்னர் பல வருடங்கள் கழித்து, தேவன் ஒரு இயந்திர தொழிநுட்பப் புகைப்படக் கருவியின் மூலம் அதை நிரூபித்தார். அது உண்மையே. 65 "அது-அது ஏதோ ஒரு கட்டுக்கதையாயிருக்கிறதா? அது அதைப் அதைப் போன்ற... ஏதோ ஒரு காரியமாயிருக்கிறதா?" இல்லை ஐயா. நாங்கள் அதை இங்கே வேதத்திலிருந்து எடுத்து, உங்களுக்கு காண்பித்துக்கொண்டிருக்கிறோம். அது அதே கர்த்தராகிய இயேசுவாய் உள்ளது. அவர் அதேக் காரியத்தைச் செய்கிறார். அவருடைய கிரியை அதேவிதமாக உள்ளது. அவருடைய வல்லமையும் அதேவிதமாகவே உள்ளது. 66 இங்கே கடந்த ஞாயிறு நடந்ததை கவனித்துப் பாருங்கள், அங்கே என்னுடைய படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தபோது, என் வாழ்க்கையில் ஒருபோதும் கண்டிராத மனிதனை தரிசனத்தில் கண்டேன். அப்பொழுது நான் வந்து, "கூடாரத்திலே ஒரு மனிதன் இருக்கிறார். அவன் நரைத்து போன, நரைமுடியுடன் இருக்கிறார். அவர் குருடாயிருக்கிறார், அவரால் நடக்க முடியாது. அவர் ஒரு சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார். ஒரு கருப்புத் தலையுடைய மனிதன் அவரை இங்கே அனுப்பினார்; அவர் ஒரு மருத்துவர், பெயர்.D. அக்கர்மேன் என்பதாகும். அவர் கறுப்புத் தலை கொண்ட கத்தோலிக்க மனிதனாயிருக்கிறார். அவர் ஒரு மனிதனை அனுப்பினார். அவர் அங்கே உட்கார்ந்திருக்கிறார்" என்றேன். பின்பு அவர் கர்த்தர் உரைக்கிறதாவது என்று கூறின மாத்திரத்தில் எழுந்து அவருடைய பார்வையையும், மற்ற எல்லாவற்றையும் பெற்று வெளியே நடந்து சென்றார். அதைச் செய்தது எது? அதேத் தூதன் இங்கிருக்கிறார். தமஸ்குவிற்கு போகும் வழியில் பவுலை வீழ்த்தித் தள்ளின அதே ஒருவர் இன்னறக்கு அவருடைய சபையிலும், அவருடைய ஜனங்களுக்குள்ளும் ஜீவிக்கிறார். அது வேதவாக்கியத்தை வேதவாக்கியத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருப்பதாயுள்ளது. அந்த விதமாகத்தான் அது இருக்க வேண்டும். ஓ, நாம் வெதுவெதுப்பானவர்களை உடையவர்களாயிருக்கிறோம். நாம் சற்று கழித்து அதற்குள்ளாக சென்று பார்க்கப் போகிறோம். 67 ஓ, நாம் ஒரு ஆழமான காரியத்தை நமக்கு முன்னே பெற்றுள்ளோம், நம்மால் இன்றைக்கும், இன்றிரவும் அதற்குள் சென்று பார்க்க முடிந்தால் நலமாயிருக்கும். இப்பொழுது இது ஆழமான தண்ணீருக்குள் செல்லத் துவங்குகிறதாயுள்ளது. நீங்கள்.... 68 உங்களுக்குத் தெரியுமா? நான் ஒரு சிறு பையனாய் இருந்தபோது, அந்த இடத்திற்கு பின்னால் இருந்த ஒரு சிறு குட்டைக்கு நான் செல்வதுண்டு. நான் அங்கு செல்வேன். நாம் யாவருமே கிட்டத்தட்ட ஆறு, ஏழு வயதாயிருக்கும்போது, ஆடையில்லாமல் அங்கே சென்றிருப்போம். அந்த தண்ணீர் கிட்டத்தட்ட குறிப்பிட்ட இந்த அளவு ஆழமாய் மாத்திரமே இருந்தது. அது ஒரு பன்றி சேற்றில் புரளும் ஆழங்கொண்ட குட்டையைப் போன்றதாயிருந்தது. அங்கே எனக்கு ஒரு சோப்புப்பெட்டி போன்று சிறு மண்மேடு இருந்தது. அப்பொழுது என்னால் தலைகீழாக பாய்ந்து மூழ்க முடியும் என்று நான் காண்பிக்க, என்னுடைய மூக்கைப் பிடித்துக் கொண்டு, அந்த விதமாக சேறு தெரிக்கும்படிக் குதித்தேன். அப்பொழுது என்னுடைய சிறிய வயிறு சேற்றில்பட, உங்களுக்குத் தெரியுமா? அது சேற்றினை எங்கும் தெரிக்கச் செய்தது. அப்பொழுது என்னால் நீந்த முடியும் என்பதை நான் என் தந்தையிடம் கூறினேன். 69 அவரும் ஒரு நாள் என்னை அங்கு அழைத்துச் சென்றார். அப்பொழுது அவர், "நீ நீந்துவதை நான் காண விரும்புகிறேன்" என்றார். உங்களுக்குத் தெரியுமா, அப்பொழுது நான் என்னுடைய உடைகளை களைந்துவிட்டு, அங்கிருந்த அந்த சிறிய வெட்டுக்கிளி புதரில் போட்டுவிட்டு, பின்னர் ஓடி தண்ணீரில் குதித்தேன். நான் எல்லாவிடத்திலும் சேற்றினை தெரிக்கச் செய்துகொண்டிருந்தேன். தந்தையாரோ சாலையின் கீழ் உள்ள வாய்க்கால் பாலத்தின் மீது அமர்ந்து கொண்டிருந்தார். அவர் அங்கு அமர்ந்து சில நிமிடங்கள் என்னை கவனித்துப் பார்த்தார். பின்னர் உடனே, "அந்த சேற்றுக் குழியிலிருந்து எழுந்து வெளியே வந்து, நீ குளித்து விட்டு, வீட்டிற்கு போய் சேர்" என்றார். பார்த்தீர்களா? 70 கிட்டத்தட்ட அந்த விதமாகத்தான் நம்மில் சிலர் நம்மை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்கிறோம். நாமோ சேற்றில் தவழ்கிறோம். அது உண்மை . நீங்கள், "நான் ஒரு மெத்தோடிஸ்டு, நான் ஒரு பெந்தெகோஸ்தே, நான் ஒரு பிரஸ்பிடேரியன். நான் ஒரு அத்தாட்சியைப் பெற்றுக் கொண்டேன். நான் அதைப் பெற்றுவிட்டேன்" என்று கூறி நங்கூரமிடப்பட்டுள்ள வரையில், நீங்கள் சேற்றில்தான் தவழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். 71 ஒரு நாள் நான் என்னுடைய மாமாவோடு இருந்தேன். நானும் அவரிடத்தில் தொடர்ந்து நீந்த தெரியும் என்று கூறிவந்தேன்... அவர் ஏறக்குறைய பதினைந்து, பதினாறு வயதுடையவராயிருந்தார். நாங்கள் ஆற்றிலே இருந்தோம். அப்பொழுது நான், "லார்க் மாமா, என்னால் நீச்சலடிக்க முடியும்" என்றேன். உங்களுக்குத் தெரியுமா? அப்பொழுது நான் நல்ல விதமாகவும், பாதுகாப்பாகவும் படகின் பின்புறமாக உட்கார்ந்து கொண்டிருந்தேன். அவரோ படகின் துடுப்பை எடுத்து, ஏறக்குறைய பத்து-அடி ஆழத்தில் என்னை தள்ளி விட்டார். அப்பொழுது அது வித்தியாசமானதாயிருந்தது, அப்பொழுது தண்ணீர் தெறித்து கூச்சலிட்டேன். உங்களுடைய ஜீவியத்தில் எப்போதுமே நீங்கள் அதுபோன்று கூச்சலிட்டதை கேள்விப்பட்டிருக்கமாட்டீர்கள். 72 என்றோ ஒரு நாள் நீங்கள் தள்ளப்படும்போது, நீங்கள் எங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்திருப்பது மேலானதாகும். ஆம் ஐயா. நீங்கள் அவரை அறிந்திருந்தால், நீங்கள் அவரை உண்மையாகவே மேலாக அறிந்திருப்பது நலம். அது உண்மை. ஆனால் இப்பொழுது நாம் ஆழமான தண்ணீருக்குள், ஆழம் நிறைந்த தண்ணீருக்குள் சென்று கொண்டிருக்கிறோம், எனவே நீங்கள் ஒரு நல்ல, கொழுமையான கிறிஸ்தவராயில்லையென்றால், அது உங்களை அங்கே மூழ்கடித்துவிடும். 73 வார்த்தையைக் கவனியுங்கள். பவுல் அதை முதலில் கண்டான். எனவே அவன் பழைய ஏற்பாட்டிற்குள் திரும்பிச் சென்று, அவன் இதைக் கண்டறிந்தான். அவன் அந்த தன்னுடைய அனுபவம் முற்றிலுமானதாயிருக்கக் கண்டான். "இப்பொழுது என்னை கீழே விழத்தள்ளியிருந்தது எது?" 74 அது ஒரு ஒளியாய், அங்கே நின்றுக்கொண்டிருந்த ஒரு பெரிய ஒளியாய், சூரியனைப் போல பிரகாசித்துக் கொண்டு, அவனுடைய முகத்திற்கு முன்பாக நின்று கொண்டிருந்தது. அப்பொழுது அவர், "சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்?" என்று கேட்டார். 75 அதற்கு அவனோ, "ஆண்டவரே, நான் துன்பபடுத்துகிற நீர் யார்?" என்று கேட்டான். 76 அப்பொழுது அவர், "நான் இயேசு" என்றார். 77 "அவர் ஒரு ஒரு மனிதனாய் இருந்தார் என்றும், தழும்புகளோடு கூடிய கரத்தை உடையவராயிருந்தார் என்றும், அவரோ இப்பொழுது கூட்டங்களில் தன்னுடைய கரங்களில் ஆணிகள் அறையப்பட்ட வடுகளோடும், தன்னுடைய தலையில் முள்முடி சூட்டப்பட்ட வடுக்களோடும் பிரசன்னமாவதாக உரிமை கோருகிறார்களே என்று நான் எண்ணினேன்." இல்லை, இல்லை ; அந்த சரீரத்தில் அல்ல, அந்த சரீரத்தில் அல்ல. புரிகிறதா? அவர் இப்பொழுது ஒரு ஒளியாய் இருக்கிறார். சவுல்... 78 அவர் இங்கே பூமியின் மேலிருந்தபோது, அவர், "நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வந்தேன். நான் தேவனிடத்திற்கு திரும்பிப் போகிறேன்" என்றார். 79 அவர் இஸ்ரவேல் புத்திரரை வனாந்திரத்தினூடாக இந்த ஒளியில் வழி நடத்திச் சென்ற தூதனாய் இருந்தார். அவர் அதே ஒளியண்டைக்குத் திரும்பிச் சென்றார். பவுல் பழைய ஏற்பாட்டிலிருந்து அதைக் கண்டான். அவர், "நானே இயேசு, உடன்படிக்கையின் தூதன்" என்றார். 80 அவர் நம்மை மீட்க மாம்சமானார். "தேவதூதருக்கு உதவியாகக் கைகொடாமல்" என்று முந்தின அதிகாரத்தில் உள்ளதை நாம் கண்டோம். நாம் அதை ஆய்ந்து படித்துக்கொண்டிருக்கிறோம். அவர் வெளிப்பட்டு, மனுஷர் தேவனைக் காணும்படிக்கு, "அவர் தேவதூதருக்கு உதவியாகக் கைகொடாமல், ஆபிரகாமின் சந்ததிக்கு உதவியாக கைகொடுத்தார். ஆமென். இப்பொழுது, அவர், "நான் அதணன்டை திரும்பிச் செல்வேன்" என்று கூறுகிறார். 81 பவுல் அதைக் கண்டபோது, அவர், "நிச்சயமாகவே, அது அவராயிருந்தது" என்றார். அது அவராயிருந்தது. 82 பேதுரு ஒரு இரவு ஜெபித்துக் கொண்டிருந்தபோது, அவன் அந்த அனுபவத்தைப் பெற்றிருந்தான். அந்த அதே ஒளியானது கட்டிடத்திற்குள் வந்து, அவனுக்கு முன்னிருந்த கதவுகளைத் திறக்க, அவன் வெளியே வீதிக்கு நடந்து வந்தான். பேதுருவோ தான் சொப்பனங் கண்டு கொண்டிருந்ததாக எண்ணிக் கொண்டான். அவன் அவ்வளவாய் அபிஷேகிக்கப்பட்டிருந்தான். எனவே என்ன சம்பவித்திருந்தது என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. அவன், "நான் விழித்தெழுந்துள்ளேனா? ஆனால் நான் இங்கே வெளியே வீதியில் இருக்கிறேனே" என்றான். 83 அவன் மாற்கு என்னும் பெயர்கொண்ட யோவானுடைய வீட்டிற்குச் சென்றான். அப்பொழுது சிறு பெண் கதவினைத் திறந்தாள், அந்த சிறு பெண் அங்கிருந்தபோது ஒரு ஜெபக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. யாரோ ஒருவர் கதவைத் தட்டிக்கொண்டிருந்தார். அப்பொழுது அவள் வாசலைத் திறந்தாள். "ஓ," அவள், "இதோ பேதுரு இப்பொழுது இங்கிருக்கிறார். அவர் சிறைச் சாலையிலிருந்து வெளியே வரவேண்டும் என்பதற்காக நீங்கள் ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள். கர்த்தர் அவரை விடுவித்துள்ளார்" என்றாள். 84 அவர்களோ, "ஓ", "நம்பமுடியவில்லையே" என்றனர். "ஓ, கர்த்தாவே அவரை விடுவியும்!" 85 "ஏன்?" அவள், "அவர் வாசலண்டை நின்று தட்டிக் கொண்டிருக்கிறார்" என்று கூறினாள். அப்பொழுது பேதுருவோ, "நான் உள்ளே வரட்டும்" என்று கூறி தொடர்ந்து பலமாய் தட்டிக் கொண்டிருந்தான். 86 "ஓ", அவள், "அது பேதுரு" என்றாள். அந்நாட்களில் அவர்கள் இழுத்து மூடும்படியான ஒரு சிறு தாழ்பாள் கட்டையை வைத்திருப்பார்கள். அவர்கள் திறந்து பார்த்து மூடும் ஒரு சிறு மூடியை கதவில் வைத்திருப்பார்கள். நீங்கள் அந்தக் கதவில் பொருத்தப்பட்டிருக்கும் அந்த சிறு மூடியை மாத்திரம் இழுத்துவிட்டு வெளியேயிருப்பவரைப் பார்க்கலாம். நீங்கள் உங்களுடைய விருந்தாளியை வீட்டிற்குள் அனுமதிக்கும் முன்னர், உங்களுடைய கதவண்டைத் தட்டுகிறது யார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அப்பொழுது கொள்ளையர்கள் இருந்தனர். நீங்கள் கதவைத் திறந்தால், அவர்கள் உங்களை கொன்றுவிடுவார்கள். 87 ஆகையால் அவர்கள் வாசலைத் திறந்தனர். அப்பொழுது அவள், "அது பேதுரு" என்றாள். 88 அவர்கள், "ஓ! ஓ, என்னே , அவர் மரித்துவிட்டார். அது அவனுடைய தூதன் அங்கே நிற்பதாகும். பார்த்தீர்களா? உங்களுக்குத் தெரியுமா, அவன் தன்னுடைய மகிமையடைந்த சரீரத்திற்குள், அந்த ஆவிக்குரிய சரீரத்திற்குள் சென்றுவிட்டான்" என்று கூறினர். 89 நாம் எப்படி அந்த பெரிய வைரக் கல்லை எடுத்தோம் என்றும், அது எப்படி ஒளியைப் பிரதிபலித்தது, எப்படி அது அங்கே திரும்பிச் சென்றது என்பது நினைவிருக்கிறதா?... "பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்து போனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்." எனவே பேதுரு மரித்துப் போய்விட்டான் என்றும், அவனுடைய இந்த பழைய மாம்ச சரீரம் விழுந்து மரித்துப் போனது என்றும், இன்னும் ஒரு சில நாட்களில் அவர்கள் அதை அடக்கம் செய்வார்கள் என்றும் அவர்கள் எண்ணிக்கொண்டனர். "ஆகையால் அவன் தன்னுடைய தூதன், இல்லை தன்னுடைய மகிமையடைந்த..." மகிமையடைந்த சரீரத்திற்குள் அல்ல, ஆனால் ஏற்கெனவே ஆயத்தமாக்கப்படிருந்த அவனுடைய ஆவிக்குரிய சரீரத்தில் இருந்தான் என்றே எண்ணியிருந்தனர். அந்த சரீரத்தினால் உங்களுடைய கரங்களை குலுக்க முடியாது. அது இந்த விதமாகக் கரத்தைக் குலுக்காது, ஆனால் அது ஒரு மனுஷசாயலில் தான் இருக்கும். எனவே அதுதான் வந்து, கதவைத் தட்டிக் கொண்டிருந்தது" என்று எண்ணிக் கொண்டனர். 90 அவளோ, "இல்லை. அது பேதுருதான். அவர்தான் அங்கே நின்றுகொண்டிருக்கிறார்" என்றாள். அவன் கதவைத் திறந்து உள்ளே நடந்து வந்தான். அது பேதுருவாயிருந்தது. இப்பொழுது, பேதுருவோ இந்த ஒளியின் மூலம் விடுவிக்கப்பட்டிருந்தான். 91 இப்பொழுது, அதேவிதமாக இந்த பூமிக்குரிய. ஆதி சபையில் இருந்த அந்த பவுல் தன் மேல் தேவனுடைய ஒளி பிரகாசித்திருந்ததைக் கண்டான், அதே ஒளியே திரும்பவும் வந்துள்ளது. இப்பொழுது, ஜனங்களால் எந்தக் காரியத்தையும் கூற முடியும், அது அதைச் சரியாக்குகிறதில்லை. ஆனால் தேவன் எந்தக் காரியத்தையாவது நிரூபிக்கும் போது, அதனுடைய கிரியை அதை நிரூபிக்கிறது. புகைப்படக் கருவியும் அதை நிரூபிக்கிறது. நாம் பெற்றுள்ள ஒவ்வொரு காரியமும்... கர்த்தர் செய்துள்ள ஒவ்வொரு காரியமும் முற்றிலுமானதாய் இருந்துவருகிறது, அது தேவன் என்று வேதவாக்கியங்களினாலும், அதனுடைய செய்கையினாலும், அனுபவத்தினாலும் பிழையற்ற விதத்தில் நிரூபிக்கப்பட்டது. ஆனாலும் அவர்கள் செவிகொடுக்கமாட்டார்கள். 92 இங்கே இந்த கூடாரத்தில் நோக்கிப் பாருங்கள். இப்பொழுது நினைவிருக்கட்டும், நீங்கள் இதை அறிவீர்கள். நாம் ஜனக்கூட்டம் அதிகமாய் வரவேண்டும் என்று வாஞ்சிக்கிறதில்லை. அவர்களை உள்ளே வைக்க போதுமான இடமும் நம்மிடம் இல்லை. ஆனால் பாருங்கள். இந்த மாதிரியான ஒரு கூட்டம், நாம் இதற்காக ஒன்று சேர்ந்து வருகிறபோது, அது பெரிய நகரங்களைக் கவர வேண்டும். ஆனால் அவர்கள் மரித்துப் போய்விட்டனர். அவர்கள் முற்றிலும் மரித்த நிலையில் உள்ளனர். அவர்களுக்கு கண்களிலிருந்தும் காண முடியவில்லை . நீங்களோ, "ஏன்? சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, அவர்கள் ஒரு மருத்துவரிடத்திடம் சென்று, தங்களுடைய கண்களை சரி செய்து கொள்ள மாட்டார்களா?" என்று கேட்கலாம். மருத்துவரால் அந்தவிதமான பார்வையைப் பெற சரிசெய்ய முடியாது. 93 இயேசு, "நீங்கள் என்னை அறிந்திருந்தால், நீங்கள் என்னுடைய நாளையும் அறிந்திருப்பீர்கள்" என்றார். மேலும் அவர், "நீங்கள் குருடரான பரிசேயர்கள். வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா?" என்றார். 94 அது உங்களுடைய தலைக்கு மேலே கடந்து செல்லுகிறதா? கவனியுங்கள். நாம் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிற காலத்தின் அடையாளங்களை நோக்கிப் பாருங்கள். இப்பொழுது, அது வெறுமென ஏதோ ஒன்றாய்... இருக்க வில்லை... நான் வெறுமென ஒரு மனிதனாய் இருக்கிறேன். நான் இதைக் குறித்து பேசும்படியான் ஒரு பிரசங்கியாராய்க் கூட இருக்கவில்லை . உலகம், "ஒரு பிரசங்கி" என்று அழைக்கிறதற்குரிய கல்வியறிவும் கூட என்னிடத்தில் இல்லை. நாம் ஏழ்மையான ஜனங்களாய் இருக்கிறோம். நாம் இருக்கின்ற கட்டிடத்தை நோக்கிப் பாருங்கள். இந்தக் காலையில் மற்ற தேவாலயங்களை நோக்கிப் பாருங்கள். ஆனால் தேவன் எங்கே இருக்கிறார் என்று பாருங்கள். அங்குதான் காரியமே உள்ளது. 95 ஆகையால் மோவாபியர் அங்கே தங்களுடைய எல்லா மினுக்கான பளபளப்போடும், தங்களுடைய அழகோடும் நின்று கொண்டிருக்க, இஸ்ரவேலரோ கூடாரங்களில் இருந்தனர். ஆனால் தேவன் எங்கேயிருந்தார்? அப்பொழுது அங்கிருந்த பரிசுத்த உருளைகள் தவறான ஒவ்வொரு காரியத்தையும் செய்துகொண்டிருந்தனர். ஆனால் அவர்களுடையஅவர்களுடைய பேராயரான பிலேயாமோ அந்த அடிக்கப்பட்ட கன்மலையையும், அந்த வெண்கல சர்ப்பத்தையும், அந்த அக்கின் ஸ்தம்பத்தையும் காணத் தவறினான். அவனுடைய கண்கள் குருடாக்கப்பட்டிருந்தன. அவனால் அதைக் காண முடியவில்லை. அவனோ, "அவர்கள் அதை வெறுமென கற்பனைச் செய்து கொண்டிருக்கிறார்கள்" என்றான். ஆனால் தேவன் அங்கே இருந்தார். 96 ஓ, தேவனுக்கு ஸ்தோத்திரம், அவர் இங்கிருக்கிறார்! தேவன் இங்கிருக்கிறார், அவர் ஏற்கெனவே செய்துள்ள அதே காரியத்தையே செய்து கொண்டிருக்கிறார். அவர் இன்னும் செய்வார். நாம் வேதவாக்கியத்தை வேதவாக்கியத்தோடு ஒப்பிடுகிறோம். தேவன் தம்மை ஒருபோதும் இந்த பூமியின் மீதுள்ள ஏதோ ஒரு பெரியக் காரியத்தில் உருவகப்படுத்திக் காட்டவில்லை . ஆனால் அவர் எப்பொழுதுமே சாதாரணமான, தாழ்மையான ஜனங்களுக்கு மத்தியில் வாசம் செய்து வந்துள்ளார். அவர் இந்தக் காலையில் இங்கே இருந்து கொண்டு அதேக் காரியத்தை செய்துகொண்டிருக்கிறார். வேதம் அதை ரூபகாரப்படுத்துகிறது. புகைப்படக் கருவியும் அதை ரூபகாரப்படுத்துகிறது. இப்பொழுது, அந்தக் காரணத்தினால் தான் நான் அந்தக் காட்சியைக் குறிப்பிட்டுக் கூறுகிறேன். அது நான் அங்கிருக்கிறேன் என்ற காரணத்தினால் அல்ல. நான் நான் ஒரு பாவியாய் இருக்கிறேன், உங்களைப் போல் கிருபையினால் இரட்சிக்கப்பட்டேன். ஆனால் நான் கூற முயற்சிப்பது என்னவென்றால், அவருடைய பிரசன்னம் நம்மோடு இருக்கிறது என்பதேயாகும். அதுவே முக்கியமான காரியமாயுள்ளது. அவர் என்னை ஒரு-ஒரு மனுவுருவெடுத்த எலியாவாக ஆக்கியிருந்தால், நீங்கள் அதை விசுவாசிக்க விசுவாசமுடையவர்களாயில்லாமலிருந்தால், அப்பொழுது அது உங்களுக்கு எந்த நன்மையையும் செய்யாது. "அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை." 97 அந்தக் காரணம்தான் இங்கே இன்றைக்கு இந்தப் பட்டிணத்திலும் உள்ளது. ஏன்? நான் இங்கே ஏதோ ஒரு கட்டிடத்தில் அல்லது ஏதோ ஒன்றில் ஒரு எழுப்புதல் கூட்டத்தை நடத்த முடிந்தால், அதை விசுவாசிக்கும்படிக்கு அநேக ஜனங்களை உங்களால் கொண்டு வர முடியாது. அவர்கள் விசுவாசிக்கமாட்டார்கள். அவர்களால் விசுவாசிக்க முடியாது. அவர்களுடைய நாள் போய்விட்டது. 98 இந்தக் காலை ஆப்பிரிக்காவில் இந்த விதமான வேத பாடமானது அநேகமாக பத்தாயிரம், குறைந்த பட்சம் பத்தாயிரம் ஆத்துமாக்களை கிறிஸ்துவுக்கு உண்டாக்கும். ஆனால் இங்கே இந்தக் காலையில் ஒரு பாவி அல்லது வேறு யாராவது, யாரோ ஒரு பின்வாங்கிப் போனவன் உட்கார்ந்திருக்கலாம். அவர்களில் பெரும்பாலனவர்கள் அலசி ஆராயப்பட்டு எல்லாமே முடிவுற்றுவிடுமளவிற்கு காணப்படுகிறது. அவ்வளவுதான். 99 ஆனால் நாம் கூற முயற்ச்சித்துக் கொண்டிருப்பது என்னவென்றால், வேதவாக்கியம் வேதவாக்கியத்தினால் ஒப்பிடப்படுகிறது என்பதேயாகும். இப்பொழுது அது எவ்வளவு மகத்தான அனுபவமாயிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, அது வேதாகமத்தோடு ஒப்பிடபட்டாலொழிய, இல்லையென்றால் மற்றபடி அது தவறானதாகும். ஊரீம் தும்மீம், தீர்க்கதரிசி எவ்வளவுதான் நல்லவராயிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, அவர் பேசின பிறகு, அந்த ஒளி ஊரீம் தும்மீமின் மேல் பிரகாசிக்கவில்லையென்றால், அது தவறானதாயிருந்தது. அந்த சொப்பனம் எவ்வளவு நல்லதாக தென்பட்டாலும், அந்த வெளிச்சம் ஊரீம் தும்மீமின் மேல் பிரகாசிக்கவில்லையென்றால், அது தவறானதாயிருந்தது. அந்த ஆசாரியத்துவம் முடிவுற்றபோது, தேவன் தம்முடைய வேதாகமத்தை முன்னிலைப்படுத்தியுள்ளார். பவுல், "நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறோரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனா யிருக்கக்கடவன்" என்று கலாத்தியர் 1:8-ல் கூறியுள்ளான். 100 வானத்திலிருந்து வந்த தூதன் வெளிப்படுத்தினவனாகிய யோவானிடத்தில் கூறினார். அது தேவனாயிருந்தது, அவர், "இயேசுவாகிய நான் இந்தக் காரியங்களை காண்பிக்கும்படிக்கு, இல்லை ரூபகாரப்படுத்தும்படிக்கு என் தூதனை அனுப்பினேன்" என்றார். அவர், "ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால் அல்லது இதிலிருந்து எதையாகிலும் எடுத்துப் போட்டால், ஜீவ புஸ்தகத்திலிருந்து அவனுடைய பங்கு எடுத்துப் போடப்படும்" என்றார். இதுதான் அது, வேதம். 101 ஆகையால், இந்த அனுபவங்களும், இங்கே நமக்கு நிகழ்ந்து கொண்டிருக்கிற இந்தக் காரியங்களும், அவை தேவனுடைய வார்த்தையினால் ரூபகாரப்படுத்தப்படவில்லையென்றால், அப்பொழுது அது தவறானதாகும். என்ன சம்பவித்தாலும் எனக்கு கவலையில்லை , அது தவறானதாகும். ஆகையால் அது வேதப் பிரகாரமானதாயிருக்கிறபடியால், முற்றிலும் சத்தியமாயிருக்கிறது. ஓ, நான் அந்த கிறிஸ்துவின் மகத்தான சரீரத்தின் ஒரு அங்கத்தினனாயிருப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 102 இப்பொழுது நாம் பாடத்திற்கு செல்வோம், நாம் பாடத்திற்குதான் வந்துகொண்டிருக்கிறோம். இப்பொழுது அவர், "இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க..." என்று கூறின இந்த இடத்தில் நாம் இங்கே முடித்தோம், இல்லை... என்னை மன்னிக்கவும். நான் 12-ம் அதிகாரத்திலிருந்து அதை எடுத்துக் கூறிக் கொண்டிருக்கிறேன். நான் அதைப் படித்துக் கொண்டிருந்தேன், ஆனால் நான் இன்னும் அதை ஆய்ந்து படித்திருக்கவில்லை . நான்.... 103 சகோதரன் நார்மன் அங்கே என்னுடைய வீட்டில் தங்கியிருக்கிறார். நான் அதை நேற்று படித்ததை அவர் அறிந்துள்ளார். அங்கிருந்த மற்ற சகோதரர்களும் நான் படித்திருந்ததை அறிந்திருக்கிறார்கள். சில நிமிடங்களுக்கு முன்பு இங்கே அமர்ந்து கொண்டிருந்த அந்த நேரத்தில் மாத்திரமே நான் அந்த வேதவாக்கியத்தை வாசித்தேன். அது உண்மை. அதை ஆய்ந்து படிப்பதில்லை, ஆனால் பரிசுத்த ஆவியானவர் விரும்புகிற விதத்தில் அதை அளிக்க அவருக்காக அப்படியே காத்திருக்கிறேன். அதைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நபர் எங்கே இருக்கிறார் என்பதை அவர் அறிந்திருக்கிறார். ஆகையால் நான் கூறப்போவது என்னுடைய சிந்தையில் உருவான ஏதோ ஒரு காரியமாய் இருந்தால், அப்பொழுது அது தவறாகும். ஆனால் நான் அவர் அதைச் செய்யும்படி அனுமதிப்பேனேயானால், அப்பொழுது அவர் அதை அதற்கு சொந்தமான இடத்திற்கு நேராகக் கொண்டு செல்வார். புரிகிறதா?. "என்னத்தைப் பேசுவோம் என்று கவலைப்படாதிருங்கள்; பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்." 104 இப்பொழுது கடந்த அதிகாரத்தில், இதற்கு முந்தின அதிகாரத்தில் நாம் இதைக் கேட்டோம், அதாவது, "முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதுமான இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக் கொள்ளுவோம்?" என்று உள்ளது. இயேசுவானவர் செய்த அதேக் காரியங்களைக் காண்பிக்கும்படிக்கு அதே மாதிரியான காரியங்கள் இங்கே சம்பவிக்கின்றன. அதே தேவனுடைய தூதன், அதேக் கிரியைகள், அதே அத்தாட்சி, ஒவ்வொரு காரியமும் அதேவிதமாக, ஒவ்வொரு காரியமும் கூட, அதே சுவிசேஷம், சரியாக வார்த்தையின்படியாய் உள்ளது. "கர்த்தரால் கற்பிக்கப்பட்டு, பின்பு நாம் கேட்டிருக்கிற அவருடைய சீஷர்களாலே உறுதியாக்கப் பட்டதுமான, இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து கவலையற்றிருப்போமானால், தண்டனைக்கு எப்படித் தப்பித்துக் கொள்வோம்?" என்று பவுல் அதே விதமாகக் கேட்டுள்ளான். 105 இப்பொழுது பவுல் தன்னுடைய எபிரேயக் கூட்டத்தாரிடத்தில் அதைக் கூறிக்கொண்டிருந்தான். இப்பொழுது இன்றைக்கு நாம் இங்கே வைத்துள்ளது போன்ற ஒலிப்பதிவுகருவிகளை அவர்கள் அந்நாட்களில் வைத்திருக்கவில்லை. ஆனால் பவுல் செய்தியை பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது, அங்கே அமர்ந்து அதை எழுதிக் கொள்ளக் கூடிய வேதப்பாரகரை அவர்கள் வைத்திருந்தனர். அதன் காரணமாகவே செய்தி இங்கே உள்ளது. நாமோ ஒலிப்பதிவு கருவிகளின் மூலமாக பதிவு செய்யப்படுகின்ற செய்தியை பெற்றுக்கொண்டிருக்கிறோம். இது சத்தியம் என்று காண்பிக்கும்படிக்கு இந்த ஒலிநாடாக்கள் உலகம் முழுவதும் செல்கின்றன. பாருங்கள், நம்முடைய மார்க்கம் வீணானதாயிருக் கவில்லை. அது முற்றிலுமாய் உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவாய், அதேக் காரியமாய் உள்ளது. இப்பொழுது நாம் அதைக் குறித்து கவலையற்றிருக்க வேண்டாம். 106 இப்பொழுது, இன்றைக்கு சபையிலிருந்து விலகிச் செல்லாதீர்கள், மேலும், "நல்லது, நான் அங்கு செல்வதினால் ஒரு விதமாக சந்தோஷப்படுகிறேன். எனக்குப் பாடுவது பிடிக்கும், அந்த சிறிய பழைய சபையைச் சுற்றிலும் உள்ள ஜனங்கள் நண்பர்களாய் இருக்கிறார்கள்" என்று கூறாதீர்கள். அவ்வாறு செய்ய வேண்டாம். 107 சகோதரனே, உங்களுடைய இருதயம் அனல் மூட்டப்பட்டு, "இங்கே இதைக் குறித்து ஏதோ ஒரு காரியத்தை நான் செய்ய வேண்டும். எனவே நான் வெளியே போய், யாராவது இரட்சிக்கப்படும்படிக்கு என்னால் இங்கு கொண்டு வரமுடியுமா என்று பார்க்க வேண்டும்" என்று கூறுங்கள். 108 ஆனால் நீங்கள் வெளியே போய், "தேவனுக்கு ஸ்தோத்திரம், நீ மனந்திரும்பவில்லையென்றால், நீ அழிந்து போகப் போகிறாய்" என்று கூற வேண்டாம். வேண்டாம். போய் அதை பெருந்தன்மையாய்க் கூறுங்கள். "ஆகையால், சர்ப்பங்களைப் போல வினாவுள்ளவர்களும், புறாக்களைப் போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்." பாருங்கள், அந்த விதமாகத்தான் செல்ல வேண்டும். ஒரு நபரை அணுகும்போது, அவன் கோழிக் குஞ்சுகளை வளர்த்துக் கொண்டிருந்தால், அவனிடத்தில் சற்று நேரம் கோழிக்குஞ்சுகளைப் பற்றிப் பேசுங்கள். புரிகிறதா? அதன் பின்னர் நீங்கள் அறியாமலேயே கர்த்தரைக் குறித்துப் பேசிக்கொண்டிருப்பீர்கள். அவன் ஒரு விவசாயியாக இருந்தால், அப்பொழுது அவனுடைய பண்ணையைப் பற்றிப் பேசுங்கள். 109 அவன் மோட்டார் வாகனங்களை விற்பவனாயிருந்தால், அவனுடைய மோட்டார் வாகனங்களைக் குறித்துப் பேசுங்கள், சற்று நேரம், "நீங்கள் அருமையான கார்களை வைத்துள்ளீர்கள் என்ற விதமாகப் பேசுங்கள்" புரிகிறதா? 110 பிதாவானவர், "அவனுடைய ஆத்துமாவைக் குறித்து அவனிடத்தில் அணுகக் கூடிய நேரம் இப்பொழுதுதான்" என்று கூறுவதை நீங்கள் ஆவியினால் மனதில் உணரும் வரைப் பேசுங்கள். 111 அப்பொழுது அந்த முந்தின உரையாடலை உங்களால் நிறுத்தி விட முடியும், பாருங்கள். அதாவது, "அது ஒரு அருமையான மோட்டார் வாகனம். இன்றைக்கு போக்குவரத்து வசதி பெரிய அளவில் மாற்றமடைந்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். ஓ, எப்படியாய் தேசங்கள் ஒன்றோடொன்று இணைந்து முன்னேற்றமடைந்து வருகின்றன. நம்முடைய தேசங்களின் நகரங்களும் ஒன்று சேர்ந்து வளர்ச்சியடைந்துள்ளன. எனவே நண்பர்களும் தாய்மார்களும் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ள முடிகிறது. நீங்கள் விற்றுக்கொண்டிருப்பது போன்ற மோட்டார் வாகனங்களை வைத்திருப்பது ஒரு அற்புதமான காரியமாய் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள்" என்று பேசலாம். 112 "ஆம் ஐயா. அது நிச்சயமாகவே அவ்வாறு உள்ளது. ஹ ஹ." ஒருவன் தன்னுடைய சுருட்டினை புகைத்துக் கொண்டிருந்தாலும் அல்லது வேறு என்ன செய்துக்கொண்டிருந்தாலும் சரி. ஆம், அவைகள், அவைகள் நல்ல கார்களாகவே உள்ளன. 113 "அதைப் போன்ற ஏதோ ஒரு காரியத்தை பழங்காலத்தவர்கள் பார்த்திருந்தால், அப்பொழுது அவர்கள் அதைக் குறித்து என்ன நினைத்திருப்பார்கள் என்பதைக் குறித்து நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா? அந்த விதமாகவே அது தொடர்ந்து நடைபெறுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். கொஞ்சம் கழித்து, "ஆம், ஆம், நிச்சயமாகவே அவ்வாறுதான் உள்ளது" என்று கூறுவீர்கள். 114 "அது மற்றொரு காரியத்தையும் செய்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். நாம் ஜனங்களை எழுப்புதல் கூட்டங்களுக்கு துரிதமாக கொண்டு வர முடிகிறது. மேலும் ஒரு எழுப்புதல் கூட்டத்திற்காக ஜனங்களால் துரிதமாக தேசத்தைக் கடந்து வர முடிகிறது." பாருங்கள், நீங்கள் இப்பொழுது கூறவேண்டியதற்கான வழியைத் திறந்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிவீர்கள். 115 நீங்கள் நிறுத்தப்படும்படிக்கு உணர்ந்தால், அப்பொழுது அதை அங்கேயே நிறுத்திவிட்டு, இந்த சுவிசேஷத்திற்கு வந்துவிடுங்கள். பீனிக்ஸில் உள்ள ஒரு மருத்துவர் கூறினது போன்று, அவர், "கர்த்தாவே, என்னுடைய வாயை நல்ல வார்த்தைகளினால் நிரப்பும். அதன்பின்னர் நான் போதுமானதை பேசிவிட்டபிறகு என்னை முழங்கையால் இடித்து நிறுத்திவிடும்" என்பாராம். உங்களுக்கு புரிகிறதா? ஆம். "நான் போதுமானவற்றைப் பேசினப் பிறகு என்னை முழங்கையால் இடித்து நிறுத்திவிடும்" என்றார். 116 இப்பொழுது, இப்பொழுது கவனியுங்கள், நாம் 15-வது அதிகாரத்திலிருந்து துவங்கப் போகிறோம், இல்லை 3-ம் அதிகாரத்தின் 15-வது வசனத்திலிருந்து துவங்கப் போகிறோம். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், கோபமூட்டுதலில் நடந்தது போல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று சொல்லியிருக்கிறதே. 117 இப்பொழுது பவுல் இங்கே பேசுவதைக் கவனியுங்கள். இப்பொழுது அதில், "வெகுகாலத்திற்குப் பின்பு, இன்று என்றும் கூறப்பட்டுள்ளது. நாம் கொஞ்ச நேரம் கழித்து அதற்குள்ளாகச் சென்று கற்றுணரப் போகிறோம், அதாவது, "வெகுகாலத்திற்குப் பின்பு, இன்று" என்று உள்ளது. "வெகுகாலத்திற்குப் பின்பு" என்பது அடுத்த அதிகாரத்தில் வருகிறது. இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் கோபமூட்டுதலில் நடந்தது போல் உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று சொல்லியிருக்கிறதே. அவர்கள் தேவனை கோபமூட்டினபோது. 118 இப்பொழுது நாம் அடுத்த வசனத்தைப் படிப்போமாக. கேட்டவர்களில் கோபமூட்டினவர்கள் யார்? இப்பொழுது எதைக் குறித்து அவன் பேசிக் கொண்டிருக்கிறான்? சுவிசேஷத்தை குறித்தேயாகும். மோசேயினால் எகிப்திலிருந்து புறப்பட்ட யாவரும் அப்படிச் செய்தார்களல்லவா? மேலும், அவர் நாற்பது வருஷமாய் யாரை அரோசித்தார்? பாவஞ் செய்தவர்களையல்லவா? அவர்களுடைய சவங்கள் வனாந்திரத்தில் விழுந்து போயிற்றே. 119 நாம் இங்கே ஒரு நிமிடம் நிறுத்துவோமாக, கோபமூட்டுதலில், "அவர்கள் கோபமூட்டினபோது." இப்பொழுது தேவன் என்ன செய்தார்? இப்பொழுது பவுல் பேச முயற்சித்துக் கொண்டிருக்கிறான். அவர்களை எகிப்திலிருந்து வெளியே வழிநடத்தினது எது? அது மோசேயாயிருந்தா? இல்லையே. மோசே மாம்சபிரகாரமான கருவியாயிருந்தான். 120 இப்பொழுது நாம் இங்கே ஒரு பிண்ணணியைப் பெற்றுக் கொண்டோம். நாம் இப்பொழுதே அதனை சரிப்படுத்த விரும்புகிறோம். இன்னும் ஒரு சில நிமிடங்களில் நாம் இங்கே இந்த இடத்தைப் பார்க்கும்போது, நீங்கள் நீங்கள் அதைப் புரிந்து கொள்ளுவீர்கள். 121 இப்பொழுது, தேவன் நிலையற்ற இளைப்பாறுதலைக் கொண்ட தம்முடைய ஜனங்களை உடையவராயிருந்தார். அவர்கள் எகிப்தில் இருந்தனர். அவர்கள் தங்களுடைய சரியான நிலைமையில்லாமல் இருந்தனர். அவர்கள் தங்களுடைய தாய்நாட்டிற்கு வெளியே இருந்தனர். அவர்கள் அந்நியரும், பரதேசிகளுமாயிருந்தனர். தேவன் அவர்களை எகிப்தில் அடைபட்டிருந்ததிலிருந்து தாய் நாட்டிற்கு கொண்டு செல்லப் போவதாயிருந்தார். 122 அது இன்றைய ஒரு மாதிரியாய் உள்ளது. நாம் நிலைகுலைந்து காணப்படுகிறோம். சதைப்பற்றுள்ள சிறு கைகளில் கோலிகளை விளையாடும் பையன்களே, பொம்மைகளோடு விளையாடுகிற சிறு பெண்பிள்ளைகளே, நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய முதல் காரியம், கொஞ்சக் காலத்திலேயே உங்களுக்கு நரைமுடி உண்டாகி, சரீரத்தில் சுருக்கம் வந்துவிடுகிறது. இங்கு ஏதோக்காரியம் தவறாய் உள்ளது. இது நிலையான கூடாரமல்ல. நாம் தவறான இடத்தில் இருக்கிறோம். அந்தக் காரணத்தினால்தான் நாம் அந்நியரும், பரதேசிகளுமாயிருக்கிறோம் என்று நாம் கூறுகிறோம். ஏதோக் காரியம் சம்பவித்துள்ளது. 123 இந்தக் காலையில் அறையில் இருந்த ஒரு சிறு பெண்மணி, எப்படி அவளைப் பார்த்து ஜனங்கள் சில நேரத்தில் சிரிக்கிறார்கள் என்று கூறினாள். அதற்கு நான், "அருமையான சகோதரியே, நீங்கள் அந்த ஜனங்களை சாந்தவரல்ல" என்றேன். நாம் ஒரு வித்தியாசமான ஜனங்களாய் இருக்கிறோம். 124 என்னுடைய சிறு பெண், "அப்பா, இன்னின்ன பெண்பிள்ளைகள் இன்ன இன்ன குறிப்பிட்டக் காரியங்களை அவர்கள் செய்தனர்" என்றுக் கூறினாள். 125 அப்பொழுது நான், "தேனே, பார்" என்றேன். அவர்கள் எல்விஸ் பிரஸ்லியினுடைய இந்த ஒலித்தட்டுக்களை வைத்திருந்தனர். ஆனால் நான், "என்னுடைய வீட்டில் நான் அவைகள் வைக்க விரும்பவில்லை" என்றேன். 126 அதற்கு அவள், "அப்பா, ஆனால் அந்த சிறு பெண்பிள்ளைகள் அருமையானவர்கள்" என்றாள். 127 அப்பொழுது நான், "அவர்கள் அருமையானவர்களாயிருக்கலாம். நான் அதற்கு எதிராக ஒன்றையும் கூறுவதற்கு இல்லை. ஆனால் ஒரு காரியம் உண்டு, நாம் வித்தியாசமானவர்களாயிருக்கிறோம். நாம் வித்தியாசமாயிருக்கிறோம். நாம் வித்தியாசமாயிருக்க வேண்டும் என்பதற்காக அல்ல, ஆனால் நமக்குள் இருக்கிற ஆவி அதிலிருந்து வெளியே வந்துவிட்டது. நீ மற்றொரு உலகத்திற்குரிய வளாயிருக்கிறாய்" என்றேன். 128 நான் ஆப்பிரிக்காவிற்கு செல்லும்போது, என்னால் அவர்களுடைய அவர்களுடைய வாழ்க்கை முறைகளுக்கேற்ப சரிப்படுத்திக்கொள்ள முடியவில்லை. அவர்கள் எந்த ஆடைகளையும் அணிகிறதில்லை . அவர்கள் நிர்வாணிகளாயிருக்கிறார்கள். அவர்கள் அழுகிப்போன ஏதோ ஒரு காரியத்தை எடுத்து, அதில் புழுக்கள் இருக்க, அதை அவர்கள் புசிக்கிறார்கள். அது எந்த வித்தியாசத்தையும் அவர்களுக்கு உண்டு பண்ணுகிறதில்லை. பார்த்தீர்களா? 129 இதுவோ வித்தியாசமாயுள்ளது. நாம் எல்லோருமே ஒரு காலத்தில் அந்த விதமாகத்தான் இருந்தோம், ஆனால் நாகரீகம் நம்மை இப்படிக் கொண்டு வந்து, நம்மை வித்தியாசமாக்கிவிட்டது. மதமாற்றம் அதை லட்சம் மடங்கு இரட்டிப்பாக்கிவிட்டது. நாம் உலகத்தின் அழுகிப் போனக் காரியங்களை ஒருபோதும் விரும்புகிறதில்லை. நாகரீகம் நம்மை சுத்தமுள்ளவர்களாக மாற்றியிருப்பது போல், கிறிஸ்து நம்மை கிறிஸ்தவர்களாக மாற்றியிருக்கிறார். கவனியுங்கள், அது மாத்திரமல்ல, ஆனால் நாம் அந்நியரும், பரதேசிகளுமாயிருக்கிறோம் என்று அறிக்கையிடுகிறோம். ஆகையால் நீங்கள் உலகத்தோடு எந்தக் காரியத்தையும் செய்ய விரும்புகிறதில்லை. அந்தக் காரியங்கள் ஒழிந்து போய்விட்டன. 130 இப்பொழுது, இஸ்ரவேலர் எகிப்தில் இருந்தனர். அவர்கள் எகிப்தியர்களாயிருக்கவில்லை. எகிப்தியர்களுக்கு, ஒரு எகிப்தியன் தன்னுடைய கரங்களை ஒரு ஆட்டின் மேல் வைப்பது ஒரு அவமானமாயிருந்தது. இஸ்ரவேலர் ஆடு மேய்ப்பவர்களாயிருந்தனர். மொத்தத்தில் கால் நடைகளை வளர்ப்பவர்களே ஒரு எகிப்தியனுக்கு முழு அவமதிப்பாய் இருக்கும்போது, அது மோசேவுக்கு எப்படி இருந்திருக்க வேண்டும். பார்வோன் யோசேப்பினிடத்தில் என்ன கூறியிருந்தான் என்று நீங்கள் கவனித்தீர்களா? "அது ஒரு அருவருப்பாயிருக்கிறது." அவன், "உம்முடைய ஜனங்கள் மேய்ப்பவர்களாயிருக்கிறார்கள்" என்றான். ஒரு எகிப்தியனால் கூட தன்னுடைய கரங்களை ஒரு ஆடு மேய்ப்பவன் மேல் வைக்க முடியாது. அவன் ஒரு வித்தியாசமான ஜனமாய் இருந்தான். 131 இன்றைக்கு ஒரு கிறிஸ்தவன் மீண்டும் பிறக்கும்போது, அது அந்த விதமாகவே அவனோடு இருக்கிறது. ஜனங்கள் குடித்துக்கொண்டும், அசுத்தமான கேலிப்பேச்சை பேசிக்கொண்டும், பெண்கள் நிர்வாணமாயும் இருக்கும் இடத்தில் சகவாசம் செய்வது அவனுக்கு அசுத்தமாயிருக்கிறது. ஒவ்வொரு காரியமும்... அது அது அது அசுத்தமானதாயுள்ளது. ஓ, கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக! நாம் இங்கே பரதேசிகளாய் இருக்கிறோம். நாம் இங்கே அந்நியர்களாய் இருக்கிறோம். ஆவியானது மாற்றப்பட்டிருக்கிறது. ஸ்தீரிகள் குட்டைக்கால் சட்டைகள் அணியாத ஒரு நகரத்திற்காகவே நாம் எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறோம். மதுபானக்கடைகள் வைத்திராமலிருக்கிற ஒரு நகரத்தையே நாம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். நீதி வாசமாயிருக்கும் ஒரு நகரத்தையே நாம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். ஆகையால் நாம் பரதேசிகளாயிருக்கிறோம். 132 ஆகையால் தேவன் ஒரு பெரிய அக்கினி உருண்டையில் இறங்கி வந்து, ஒரு ஒளிவட்டமாக, ஒரு முட்செடிக்குள் வேகமாய் இறங்கி வந்து முதலில் மோசேவுக்கு தம்மை வெளிப்படுத்தத் துவங்கினார். மோசே கூறினான்.... அன்றொரு இரவு நாம் அந்தப் பாடத்தை எப்படிப் பார்த்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இயேசுவானவர் பூமியின் மேலிருந்தபோது, அவர், "மோசேக்கு முன்பே நான் இருக்கிறேன்" என்று கூறினார். அது எரிகிற முட்செடியில், அக்கினி ஸ்தம்பத்தில் இருந்த இயேசுவாயிருந்தது. அது இன்றைக்கும் மாறாத அதே இயேசுவாய் உள்ளது. அவர் தம்மை ஒரு அக்கின ஸ்தம்பத்தில் வெளிப்படுத்தினார். அப்பொழுது மோசே அந்த அனுபவத்தைப் பெற்றுக் கொண்டான். அதன்பின்னரே அவன் எகிப்திற்குச் செல்கிறான். அவன் சுவிசேஷத்தை, நற்செய்தியைப் பிரசங்கிக்க, அடையாளங்களும், அற்புதங்களும் அவனைப் பின்தொடர்ந்தன. உங்களுக்கு அது புரிகிறதா? அது இன்றைக்கும் அதேக் காரியமாகத்தான் உள்ளது. 133 அது மாத்திரமல்ல, ஆனால் அந்த எபிரேயர்கள் வெளியே வந்து, அந்த ஒளியில் நடந்தபோது, அவர்கள் அதே அக்கினி ஸ்தம்பத்தினால் வழிநடத்தப்பட்டனர். வேதம், "தேவனை பரீட்சித்துப் பார்க்க வேண்டாம்" என்று கூறியுள்ளது. 134 இதைக் கவனியுங்கள். நான் இதை வாசிக்கட்டும். இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், கோபமூட்டுதலில் நடந்தது போல் உங்கள் இருதயங்களை கடினப்படுத்தாதிருங்கள் என்று சொல்லியிருக்கிறதே, அவருடைய சத்தம் உங்களுடைய இருதயத்தில் பேசிக்கொண்டிருக்கிறது. அவர்கள் அவரை கோபமூட்டினார்கள். கவனியுங்கள். கேட்டவர்களில் கோபமூட்டினவர்கள் யார்? 135 இஸ்ரவேலர்கள் தங்களுடைய அவிசுவாசத்தினால் தேவனுக்கு கோபமூட்டினார்கள் என்பதை எத்தனைபேர் அறிவீர்கள்? (சபையோர், "ஆமென்" என்கின்றனர். ஆசி.] அவர்கள் முற்றிலுமாய் முறுமுறுத்தனர். தேவன் அங்கே நடந்து சென்றார். அவர்கள் முறுமுறுத்தபோது... முதல் காரியம், அவர்கள் தொல்லைக்குள்ளானார்கள். இதோ இந்த அக்கினி ஸ்தம்பம் அவர்களுக்கு மேலே இருந்தது. அவர்கள் எல்லோரும் அதை கண்டார்களா அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எப்படியிருந்தாலும் மோசே அதைக் கண்டான். அது அவர்களுக்கு மேலே இருந்தது. அவர்கள் அதை கவனித்தனர். அவர்கள் வந்தபோது... அவர்கள் அதைக் காணவில்லையா என்றால், அவர்கள் அதைக் கண்டார்களா அல்லது இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. அது அவர்களுக்கு முன்பாகச் சென்றது. அது அங்கே இருந்தது என்று வேதம் கூறியுள்ளது. 136 வேதம், "வானசாஸ்திரிகளுக்கு முன்பாக நட்சத்திரம் சென்றது" என்று கூறியுள்ளது. வானசாஸ்திரிகளைத் தவிர வேறு யாரும் அதைக் காணவில்லை. அது ஒவ்வொரு வானிலை ஆய்வுக் கூடத்தையும் கடந்து சென்றது. அவர்கள் அப்பொழுது நட்சத்திரங்களைக் கொண்டே நேரத்தைக் கணக்கிட்டனர். ஆனாலும் வான சாஸ்திரிகளைத் தவிர வேறு எவருமே அதைக் காணவில்லை. அந்த நட்சத்திரம் அவர்கள் காண்பதற்காகவே இருந்தது. அந்த நட்சத்திரம் வான சாஸ்திரிகளுக்காகவே அனுப்பப்பட்டிருந்தது. 137 அக்கினி ஸ்தம்பம் மோசேக்கு அனுப்பப்பட்டது, மோசே இஸ்ரவேல் புத்திரருக்கு அனுப்பப்பட்டான். அவர்கள் மோசேயைப் பின்பற்ற வேண்டியவர்களாயிருந்தனர். அவர்களால் மோசேயைக் காண முடிந்தது. மோசே அந்த ஒளியைக் கண்டான். அவர்கள் அங்கு புறப்பட்டுச் சென்றனரே!....? அவர்கள் வெளியே புறப்பட்டுச் சென்றபோது, அவர்கள் சிவந்த சமுத்திரத்தண்டை வந்தனர். ஓ, அவர்கள் அவர்கள் பழைய எகிப்து தேசத்தில் இருந்தபோது, அந்த எல்லா அற்புத அடையாளங்களையும், சம்பவித்த காரியங்களையும் ஒருபோதும் கண்டதேயில்லை. ஆனால் அவர்கள் தங்களுடைய பயணத்தில் வெளியே புறப்பட்டபோது, மனமாற்றமடைந்து வெளியே கொண்டுவரப்பட்டனர். அதன்பின்னர் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முதல் காரியம் என்னவெனில் அவர்கள் தொல்லைக்குள்ளானார்கள். 138 தேவன் உங்களை தொல்லைக்குள் கொண்டுவர விரும்புகிறார். அவர் உங்களுக்கு தொல்லையை வைத்து, நீங்கள் அதைக் குறித்து என்ன செய்வீர்கள் என்று காணவே விரும்புகிறார். ஆகையால் அவர் சிவந்த சமுத்திரத்தண்டை நிறுத்தினார். முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா? அவர்களை இந்த இடம் வரைக்கும் பவனி வரச் செய்து, அதன்பின்னர் அவர்களுக்குப் பின்னர் பார்வோனை அனுப்பினார். தேவன் எப்படி அதைச் செய்ய விரும்புகிறார் என்று பார்த்தீர்களா? அவர் தம்முடைய வல்லமையையும், அன்பையும் காண்பிக்க விரும்புகிறார். அவர் தேவனாயிருக்கிறார். அவர் யாராயிருக்கிறார் என்பதை உங்களுக்கு காண்பிக்க அவர் விரும்புகிறார். ஆமென். இன்றைக்கு அதைக் குறித்த தொல்லை என்னவெனில், ஜனங்கள், "ஓ, அந்த நாட்கள் கடந்துவிட்டன" என்று கூறுகின்றனர். இல்லையே. நீங்கள் அதைப் போன்ற காரியத்தினால் கற்பிக்கப்பட்டிருக்கும்போது, எப்படி தேவன் தம்மை காண்பிக்க முடியும்? ஆனால் தேவன் தம்மை வெளிப்படுத்த விரும்புகிறார். 139 இதோ இஸ்ரவேல் புத்திரர் வெளிச்சத்தில் நடந்து வருகின்றனர். மோசே அவர்களுக்கு முன்னால் செல்கிறான். அங்கே அவர்கள் அவ்வாறு சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது மோசே, "வாருங்கள். இது தான் வழி. தேவன் அழைத்துக் கொண்டிருக்கிறார். நாம் வெளியே சென்று கொண்டிருக்கிறோம். நாம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறோம்" என்றான். "ஓ, அல்லேலுயா!" இதோ அவர்கள் எல்லோரும் சத்தமிட்டுக் கொண்டும், குதித்துக் கொண்டும், ஒரு நல்ல நேரத்தை உடையவர்களாயிருந்தனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். முதல் காரியம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா, அவர்கள் பின்னோக்கிப் பார்த்து, "ஓ, அது என்ன தூசி?" என்று கேட்டனர். 140 அப்பொழுது அவர்களில் ஒருவன் ஒரு மலையின் மேலேறிப் பார்த்து, "ஓ, ஓ! ஐயோ, ஐயோ! அது பார்வோனுடைய சேனை" என்றான். 141 அப்பொழுது தேவன், "நீங்கள் அதைக் குறித்து மிகவும் பயப்படுகிறது என்ன? நான் அங்கே என்ன செய்தேன் என்பதை நீங்கள் விசுவாசிக்கவில்லையா? நீங்கள் அதைக் குறித்து மிகவும் கவலையுற்றிருக்கிறது என்ன? நீங்கள் ஏன் என்னைக் கோபப்படுத்துகிறீர்கள்?" என்று கேட்டார். 142 அவர்கள் அங்கே சென்றபோது, மோசே போய் தேவனிடத்தில் பரிந்து பேசி வேண்டினான். அப்பொழுது தேவன் சிவந்த சமுத்திரத்தைத் திறந்தார். அவர்கள் அதைக் கால்நடையாய் கடக்க, பின்வந்த சத்துருக்களையோ சமுத்திரம் மூடிக் கொண்டது. அந்த விதமாகத்தான் தேவன் அதைச் செய்கிறார். பயப்படாதீர்கள். உணர்ச்சிவசப்படாதீர்கள். கலக்கமடையாதீர்கள். நீங்கள் தேவனை கோபமூட்டினீர்கள். 143 அப்பொழுது அவர் என்ன செய்தார்? "நமக்கு ஒரு பெரிய சோதனை உண்டாயிருந்தது: தேவனுக்கு ஸ்தோத்திரம், நாம் அதைக் கடந்து விட்டோம். நமக்கு இனிமேல் ஒன்றுமே உண்டாயிராது. நாம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு செல்லும் நம்முடைய பாதையில் இருக்கிறோம்" என்பது போன்று காணப்பட்டது. அவர் அவர்களை தண்ணீரே இல்லாத வனாந்திரத்தினூடாக வழி நடத்தினார். உங்களால் அதை கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? தேவன் தம்முடைய பரிசுத்தமாக்கப்பட்ட, பரிசுத்த ஜனங்களை இந்த கண்ணிக்குள்ளாக வழிநடத்திச் சென்று, அதன்பின்னர் அவர்களை அந்த கண்ணியிலிருந்து வெளியேக் கொண்டுவந்து, தண்ணீரேயில்லாத வனாந்திரத்தினூடாக அவர்களை நடத்தினார். அவரால் தண்ணீர் இருந்த வேறு ஏதோ ஒரு வழியாய் அவர்களை அழைத்துச் சென்றிருக்க முடியும். ஏன்? அவர் வேண்டுமானால், வழி நெடுக ஒரு ஆற்றை அவரால் உண்டுபண்ணியிருக்க முடியும். அவர் விரும்பியிருந்தால், ஒவ்வொரு மலையையும் சந்தோஷத்திற்குள்ளாக அடித்து உடைத்து, ஆகாயத்தில் ஐம்பது அடி உயரத்திற்கு தண்ணீரை பீச்சியடிக்க செய்திருக்க முடியும். நிச்சயமாகவே அவரால் அதை செய்ய முடியும். ஆனால் அவர் அதை அவ்வாறு செய்திருந்தால், அது மிகவும் இலகுவானதாயிருந்திருக்கும். ஓ, என்னே! கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக. 144 "சகோதரன் பிரான்ஹாம், ஏன் தேவன் இதை நிகழ அனுமதித்தார்? ஏன் தேவன் அதைச் செய்தார்?" தேவன் அதை செய்து கொண்டிருக்கிறார் அவர் செய்யட்டும். அப்படியே தொடர்ந்து செல்லுங்கள். அது தேவனுடைய வேலை. "நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிபடும்." ஆம் ஐயா. அது என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது? 145 "சகோதரன் பிரான்ஹாம், என்னுடைய எல்லா பணத்தையும் இழந்துவிட்டேன்" எனலாம். நல்லது, எப்படியாயினும் தேவனுக்கு ஸ்தோத்திரம். 146 "ஓ, நான் இதைச் செய்தேன், இது சம்பவித்துவிட்டது, புயல் என்னுடைய வீட்டை அடித்துக்கொண்டு போய்விட்டது." எனலாம். 147 எப்படியிருந்தாலும் தேவனுக்கு ஸ்தோத்திரம். "கர்த்தர் கொடுத்தார் கர்த்தர் எடுத்தார். கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம். " அப்படியே தொடர்ந்து சென்று கொண்டேயிருங்கள். அவையாவும் தேவனுடைய மகிமைக்காகவேயாகும். தேவன் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதை அவர் அறிந்திருக்கிறார். சிலர் தண்ணீரினூடாக, சிலர் வெள்ளத்தினூடாக, சிலர் ஆழ்ந்த சோதனையினூடாக, ஆனால் எல்லோருமே இரத்தத்தினூடாகவே. 148 அந்தவிதமாகவே அவர் நம்மை வழி நடத்துகிறார். அது உண்மை, ஓ, என்னே! நான் நின்று கூச்சலிட வேண்டும் என்பது போன்று உணருகிறேன். அந்த விதமாகவே அவர் தம்முடைய அருமையான பிள்ளைகளை வழிநடத்துகிறார். ஓ, உங்களால் அதை அப்படியே உணர முடிகிறதா... இப்பொழுது, நான் ஒரு உளவியலாளர் அல்ல. ஆனால் இந்த கட்டத்தில் அந்த அருமையான ஆவி அபிஷேகிப்பதை உங்களால் உணர முடிகிறதா? (சபையோர், "ஆமென்" என்கின்றனர்.ஆசி) நம்முடைய கண்கள் இப்பொழுது அப்படியே திறக்கப்பட்டு, இந்த சுவர்களை சுற்றிலும் மற்றும் மேலும் கீழும் உள்ள இந்த சபையின் நடைப் பிரகாரங்களிலும் என்ன நின்று கொண்டிருக்கிறது என்பதை நோக்கிப் பார்த்தால் எப்படியிருக்கும்? 149 ஓ எலிசா! ஒரு நாள் காலை அந்த பையன் அவ்வளவு காணமுடியாத குருடனைப் போல, "சீரியர்கள் அங்கே சுற்றி நிற்கிறதைப் பாரும்" என்றான். அதற்கு எலிசா, "ஆனால் அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்" என்றான். அப்பொழுது அந்தப் பையனோ, "நான் யாரையும் காணவில்லையே" என்றான். அப்பொழுது எலிசா, "கர்த்தாவே, அந்தப் பையனுடைய கண்களைத் திறந்தருளும்" என்றான். 150 அப்பொழுது அவன் அந்த வயோதிக தீர்க்கதரிசியை நோக்கிப் பார்க்க, இதோ, எலிசாவைப் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான். அப்பொழுது அவன் உறுதி கொண்டான். 151 அதன்பின் எலிசா, "நாம் போய் அவர்களை குருடாக்குவோம்" என்றான். அவர்கள் காணும்படியான அவ்வளவு பரிபூரண பார்வையை உடையவர்களாயிருந்தனர். ஆனாலும் அவர்கள் எலிசாவிற்கு குருடாயிருந்தனர். அப்பொழுது அவன், "நீங்கள் எல்லோரும் எலிசாவைத் தேடிக்கொண்டிருக்கிறீர்களா?" என்று கேட்டான். அதற்கு அவர்கள், "ஆம், ஐயா" என்றனர். 152 அப்பொழுது எலிசா, "வாருங்கள், அவன் எங்கே இருக்கிறான் என்று நான் உங்களுக்கு காண்பிப்பேன்" என்றான். அந்த எலிசாவே அவனாயிருந்தும், அவர்களை வழிநடத்திக்கொண்டு போனான். ஆனாலும் அவர்கள் அதை அறிந்திருக்கவில்லை. 153 அந்தவிதமாகவே அது இன்றைக்கும் உள்ளது. கிறிஸ்து இங்கே இருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் இங்கே இருந்து கொண்டு, அவர் எப்பொழுதும் செய்துள்ள அதேக் காரியங்களையே அவர் செய்து கொண்டிருக்க, உலகமோ அதற்கு குருடாக உள்ளது. அவர்கள் அதை அறியாதிருக்கிறார்கள். "ஓ, அதைக் குறித்து எனக்குத் - எனக்குத் தெரியாது. என்னுடைய போதகர்...'' ஓ, இழிவான தளர்வுற்ற நிலையில் உள்ள ஜனங்களே! நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா? அவர்கள் அதற்கு குருடாயிருக்கிறார்கள். அவர்கள் அதை அறியாதிருக்கிறார்கள். தேவன் வழிநடத்திக் கொண்டிருக்கிறார். 154 இப்பொழுது, அவர்கள் சீன் வனாந்திரத்தினூடாக வந்தபோது, அங்கு தண்ணீர் இல்லாதிருந்தது. தேவன் அதை அருளியிருந்தார். ஓ, அவர்கள் ஒரு நீர் தேங்கியிருந்த குட்டையைக் கண்டனர். அப்பொழுது அவர்கள், "இதில் தண்ணீர் உள்ளதே" என்றனர். ஆனால் அவர்களால் அந்தத் தண்ணீரை சுவைத்துப் பார்க்கக் கூட முடியாமற்போயிற்று. ஓ, அது பயங்கரமாயிருந்தது. என்னே , அது-அது நூறு சதவிகிதம் கந்தகத்தைப் பார்க்கிலும் மோசமாய் இருந்தது. பாருங்கள், உங்களுக்குத் தெரியுமா? அதில் அழுகிப்போன முட்டைகளைப் போன்றவை இருந்தன. "ஓ, என்னே! அது பயங்கரமாயிருந்தது. அது விஷமாயிருந்தது. இப்பொழுது, அது சீன் வனாந்திரம் என்று அழைக்கப்பட்டது. அங்கே பல பேரீச்சமரங்கள் வளர்ந்திருந்தன. அந்த ஊற்றண்டையிலே பேரீச்சமரங்கள் வளர்ந்திருந்தன. அப்பொழுது மோசே, "... " 155 தேவன், "ஏன் அவர்கள் இப்படி செய்கிறார்கள்? ஏன் அவர்கள் இப்படி செய்கிறார்கள்? அவர்கள் எதற்காக என்னை கோபமூட்டிக் கொண்டிருக்கிறார்கள்? நான் அங்கே முன்னே அதை செய்திருந்தால், இந்த சூழ்நிலைக் குறித்தும் ஏதோ ஒரு காரியத்தை என்னால் செய்ய முடியாதா?" என்றார். 156 அவர் உங்களை ஒரு சுகவீனத்திலிருந்து குணமாக்கியிருந்தால், அவரால் உங்களை மற்றொன்றிலிருந்து குணமாக்க முடியுமல்லவா? (சபையோர், "ஆமென்" என்கின்றனர்.ஆசி) அவர் உங்களை ஒரு தொல்லையிலிருந்து வெளியே கொண்டு வந்திருந்தால், அவரால் உங்களை மற்றொன்றிலிருந்தும் வெளியேக் கொண்டுவர முடியுமல்லாவா? ("ஆமென்."] தேவனுக்கு ஸ்தோத்திரம்! அவர் என்னை பாவத்திலிருந்து வெளியே கொண்டு வந்திருப்பாரேயானால், அவரால் என்னை கல்லறையிலிருந்தும் வெளியேக் கொண்டு வர முடியும். அவர் தேவனாயிருக்கிறார். அது வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறதா? அவர் மேல் உங்கள் கண்களை வைத்து, அப்படியே தொடர்ந்து செல்லுங்கள். 157 மேலும், "நான் சிவந்த சமுத்திரத்தை பின்தொடர்ந்து வந்த எகிப்தியருக்கு மூடச் செய்து, அவர்களை மூழ்கடித்திருப் பேனேயானால், இந்த தண்ணீரைக் குறித்ததற்கு ஏதோ ஒரு காரியத்தை என்னால் செய்யமுடியுமல்லவா? இதைக் குறித்து எதற்காக என்னை கோபப்படுத்துகிறீர்கள்? ஓ, உங்களுடைய அவிசுவாசமாயிற்றே! உங்களுடைய அவிசுவாசத்தின் காரணத்தினாலே, நீங்கள் எனக்கு கோபமூட்டுகிறீர்கள்" என்றார். 158 இப்பொழுது "சீன்" என்ற வார்த்தை இங்கே உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. கோபமூட்டினார்கள். அவர்கள் அதைச் செய்ததற்குக் காரணம், அவர்கள் அவிசுவாசித்தனர். அவர்கள் ஒருபோதும் வெளியே போய் பகடைக் காய்களை உருட்டி சூதாட்டம் விளையாடவோ, அதுபோன்ற காரியங்களை செய்யவேயில்லை. அவர்கள் ஒரு போதும் யாரோ ஒருவருடைய மனைவியோடு ஓட்டம் பிடிக்கவில்லை. வெளியே போய் பொய் சொல்லவில்லை. அவர்கள் அதை செய்துகொண்டிருக்கவில்லை. ஆனால் துவக்கத்தில் அது பாவமாயிருக்கவில்லை. 159 விபச்சாரத்தில் வாழ்வது பாவமல்ல, புகைபிடித்தல், புகையிலையை மெல்லுதல், மது அருந்துதல், சூதாடுதல், சபித்தல், சத்தியம் பண்ணுதல் போன்றவை பாவமாயிருக்கவில்லை. அது அவிசுவாசத்தின் தன்மைகளாகும். நீங்கள் ஒரு அவிசுவாசியாயிருக்கின்ற காரணத்தால் அதைச் செய்கிறீர்கள். நீங்கள் ஒரு விசுவாசியாயிருந்தால், நீங்கள் அதைச் செய்யமாட்டீர்கள். அந்த காரணத்தினால்தான் இயேசு, "என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு" என்றார். அவன் விசுவாசிக்கிறான் என்று கூறுவதல்ல, ஆனால் உண்மையாகவே விசுவாசிக்கிறவனுக்கே! அங்கு தான் காரியமே உள்ளது. அது உங்களுடைய எல்லா துவக்க அத்தாட்சியையும் எடுத்துப் போடுகிறது. புரிகிறதா? இப்பொழுது அங்குதான் காரியம். "என் வசனத்தைக் கேட்டு, சத்தமிடுகிறவன்," என்றல்ல. "என் வசனத்தைக் கேட்டு, அந்நிய பாஷைகளைப் பேசுகிறவன்," என்றல்ல. "என் வசனத்தைக் கேட்டு, தன்னுடைய கரத்திலோ அல்லது தன்னுடைய முகத்திலோ இரத்தத்தை உடையவனாயிருக்கிறவன்" என்றல்ல. அல்லது இன்னும் வேறேன்னவோ உடையவனாயிருப்பவனல்ல. அதுவல்ல அது. "என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்." 160 பாவம் என்றால் என்ன? அவிசுவாசம். சிறிய ஏதோ ஒரு காரியம் உருவாகும்போது, நேராக வேதத்திற்குச் சென்று, அது உண்மையா அல்லது இல்லையா என்று கண்டறிவதற்குப் பதிலாக, "ஓ", நீங்களோ, "நான்... இல்லை ! பாருங்கள், நீங்கள் தொடர்ந்து அப்படியே போகிறீர்கள். நான் இருப்பதைப் போன்றே ஒரு பிரஸ்பிடேரியனாக தொடர்ந்து இருப்பேன், பாருங்கள்" என்று கூறுகிறீர்கள். நீங்கள் குருட்டுத்தனமாக அப்படியே தொடர்ந்து போய் தேவனை கோபமூட்டுகிறீர்கள். 161 தேவன் ஏதாவது காரியத்தைச் செய்கிறபோது, அவர் அந்த தேசம் அதைப் பற்றிப்பிடித்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால் அதற்கு பதிலாக, "உங்களுக்குத் தெரியும், நீங்களோ, எனக்கு அதைக் குறித்து தெரியாது" என்று கூறுகிறீர்கள். பார்த்தீர்களா? ஜனங்கள் அதைப் புரிந்து கொள்ளும்படிக்கு அவர் எதிர்பார்க்கிறார். நீங்கள் போதுமான அக்கறை கொண்டவர்களாயிருந்து, வேதாகமத்தோடு அமர்ந்து ஆராய்ந்து பார்த்தால் நலமாயிருக்கும். வேதாகமத்தினூடாகச் சென்று, அதை முன்னும் பின்னுமாக ஆராய்ந்து பார்த்து, அது சம்பவித்துள்ளதா, அது நிறைவேறும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும். அப்பொழுது நீங்கள் அதைப் புரிந்து கொள்ளுவீர்கள். ஆமென். 162 இப்பொழுது கவனியுங்கள். இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், கோபமூட்டுதலில் நடந்தது போல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று சொல்லியிருக்கிறதே. அவர்களால் தேவன் கோபமூட்டப்பட்ட போது, நீங்கள் பாருங்கள். கேட்டவர்களில் கோபமூட்டினவர்கள் யார்? மோசே பிரசங்கித்த சுவிசேஷத்தைக் கேட்டவர்கள், மோசேயினால் எகிப்திலிருந்து புறப்பட்ட யாவரும் அப்படிச் செய்தார்களல்லவா? 163 அங்கிருந்து வெளியே வந்த அந்த அசலான கூட்டத்திலிருந்து எத்தனை பேர் இரட்சிக்கப்பட்டார்கள் என்பதை எத்தனைபேர் அறிவீர்கள்? எத்தனைபேர்? (யாரோ ஒருவர், "இருவர்" என்கிறார். ஆசி) சரியாக இரண்டு பேர். அவர்களுடைய பெயர்களை எத்தனைபேர் அறிவீர்கள்? (காலேபு மற்றும் யோசுவா.) அது சரியே. இருபது இலட்சத்திற்கு மேற்பட்டவர்களிலிருந்து காலேபு மற்றும் யோசுவா என்ற இருவர் மாத்திரமேயாகும். 164 இதற்கு செவிகொடுங்கள். "மேலும் அவர்... " இப்பொழுது 17ம் வசனம். மேலும், அவர் நாற்பது வருஷமாய் யாரை அரோசித்தார்? அவிசுவாசத்தின் காரணத்தால், பாவஞ்செய்தவர்களையல்லவா, அவிசுவாசித்தவர்களை...? 165 அகராதியை எடுத்துக் கொண்டு, பாவம் என்பது எதைப் பொருட்படுத்துகிறது என்பதைக் கண்டறியுங்கள். வேதாகம் அகராதியை எடுத்துக்கொள்ளுங்கள். அது அவிசுவாசமாய் உள்ளது. அவிசுவாசம் என்பது "பாவமாய்" உள்ளது. "விசுவாசியாதவனோ ஏற்கெனவே ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று," பரிசுத்த யோவான் 4, பாருங்கள், "ஏற்கெனவே ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று." ...அவர்களுடைய சவங்கள் வனாந்திரத்தில் விழுந்து போயிற்றே. பின்னும், என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று அவர் யாரைக் குறித்து ஆணையிட்டார்? 166 உங்களுடைய அவிசுவாசமாயிற்றே! ஓ, எப்படி நான் இன்னும் என் அதிகாரத்தின் பொருளைக் கூறி முடிக்கவேயில்லை. ஆனால், பாருங்கள், அதுதான் இன்றைக்கு இந்த தேசத்தோடு உள்ள காரியமாய் உள்ளது. அடையாளங்களும், அற்புதங்களும் இந்த தேசத்தினூடாக கடந்து சென்றுள்ளன. அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் தொடர்ந்து அதன் பேரில் தங்களுடைய முதுகைக் காண்பித்தனர். அப்பொழுது அவர், "அவர்கள் செல்லத் துவங்கின தேசத்திற்குள் நான் அவர்களை பிரவேசிக்க அனுமதிக்கமாட்டேன் என்று நான் ஆணையிடுவேன்" என்றார். 167 இன்றைக்கு இந்தப் பெரிய சபைகளோடு உள்ள காரியம் என்ன? அவர்களுடைய அவிசுவாசத்தினால் தேவனுக்கு கோப் மூட்டியுள்ளனர். அல்லேலுயா! அவர் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்கு பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார். அவர் அவர்களுக்கு சுவிசேஷத்தை அளிக்க முயற்சித்தார், அவர்களோ தங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்தினார்கள். அவர்கள் தங்களுக்கு சமய கோட்பாட்டு முறைகளை உண்டாக்கிக் கொண்டு, அவர்கள் சிறு ஸ்தாபனங்களை உண்டாக்கிக்கொண்டு, "நாங்கள் இதை விசுவாசிக்கிறோம் மற்றபடி வேறெதையும் அல்ல," என்கிறார்கள். தேவனால் அதற்குள்ளாக வரமுடியவில்லை. இன்றைக்கு அவர்கள் எங்கேயிருக்கிறார்கள்? ஒரு பக்கமாக ஓரம் கட்டியுள்ளனர். 168 தேவனுடைய சிறிய, விசுவாசமுள்ள குழுவானது அடையாளங்களோடும், அற்புதங்களோடும் தொடர்ந்து முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது. அவர் அவர்களை சோதனைக்குட்படுத்திக் கொண்டிருக்கிறார். "தேவனிடத்திற்கு வருகிற ஒவ்வொரு புத்திரனும் முதலில் சோதித்தறியப்பட்டு, பரீட்சிக்கப்பட வேண்டும்,'' பயிற்றுவிக்கப்பட்ட பிள்ளையாயிருக்க வேண்டும். 169 முதலில் சிறு காரியம் சம்பவிக்க, அதற்கே, "ஓ, எப்படியாயினும் அது ஒன்றுமில்லை" என்று கூறினால், அப்பொழுது நீங்கள் தேவனுடைய பிள்ளையாயிராமல் வேசிப்பிள்ளையாயிருக்கிறீர்கள். 170 ஏனென்றால் ஒரு தேவனுடைய பிள்ளை ஆபிரகாமின் வித்தாயிருக்கிறான், அவன் இல்லாதவைகளை இருக்கிறது போல அழைத்து, "தேவன் அவ்வண்ணமாய்க் கூறினார்" என்று கூறி அப்படியே தொடர்ந்து முன் செல்கிறான். ஆமென். என்னக் கூறினாலும் அல்லது எந்த காரியம் வித்தியாசமானாலும், கவலைப்படாமல், அவர்கள் எப்படியும் தொடர்ந்து முன்சென்று கொண்டேயிருக்கிறார்கள். "தேவன் அவ்வண்ணமாய்க் கூறினார்," என்பார்கள், 171 ஆபிரகாம் அது எவ்வளவு முரண்பாடாய் இருந்தபோதிலும் கவலைப்படாமல், அந்தக் குழந்தைக்காக அவன் இருபத்தைந்து வருடங்கள் காத்திருந்தான். அவன் அவிசுவாசிகளிடத்திலிருந்து தன்னை வேறுபிரித்துக்கொண்டான், ஆமென். ஆகையால் அவனால் விசுவாசிக்க முடிந்தது. ஓ, என்னே! நான் பக்திப்பரவசமடைகிறேன். அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள், "ஆ, அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன. அதைப் போன்ற அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது. அது மதவெறித்தனம்" என்ற அந்த உலகத்தின் கோட்பாட்டிலிருந்து நீங்கள் உங்களை வேறுபிரித்துக் கொள்ள வேண்டும். உங்களை வேறு பிரித்துக் கொள்ளுங்கள். 172 வேதம், "ஆனபடியினால் நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டு பிரிந்து போங்கள், அப்பொழுது நான் உங்களை ஏற்றுக் கொள்வேன்" என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று உரைத்துள்ளது. எவ்வளவு அற்புதம்! "நீங்கள் உங்களை பிரித்துக்கொண்ட பிறகு, நான் உங்களை ஏற்றுக்கொள்வேன். அப்பொழுது நீங்கள் என்னுடைய பிள்ளைகளாயிருப்பீர்கள். நான் உங்கள் தேவனாயிருப்பேன். உங்களை வேறுபிரித்துக் கொள்ளுங்கள். உங்களை அவிசுவாசிகளோடு பிணைத்துக் கொள்ளாதீர்கள். அது உண்மை. 173 ஒரு வாலிபன் திருமணம் செய்துகொள்ளும்போது வார்த்தையை விசுவாசிக்காத ஒரு பெண்ணை விவாகம் செய்து கொள்கிறான். அல்லது ஒரு வாலிபப் பெண் வார்த்தையை விசுவாசிக்காத ஒரு பையனை விவாகம் செய்கிறாள். நீங்கள் அவ்வாறு செய்ய வேண்டாம். அவன் எவ்வளவு அழகாயிருந்தாலும் எனக்கு கவலையில்லை அல்லது அவள் எவ்வளவு அழகாயிருந்தாலும், அவள் என்னதான் பெரிய கண்களைக் கொண்டிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. இந்நாட்களில் ஒன்றில் அவையாவும் மங்கி மறைந்து போகும். ஆனால் சகோதரனே, உங்களுடைய ஆத்துமா என்றென்றைக்குமாய் ஜீவிக்கப்போகிறது. எனவே, நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் குறித்து நீங்கள் ஜாக்கிரதையாய் இருங்கள். அவள் ஒரு உண்மையான விசுவாசியாயில்லையென்றால் அல்லது அவன் ஒரு உண்மையான விசுவாசியாயில்லையென்றால், நீங்கள் அந்த விதமாக உங்களைப் பிணைத்துக்கொள்ளாதீர்கள். அப்படிப்பட்ட காரியத்திலிருந்து விலகியிருங்கள். அது உங்களுடைய பாதையில் உங்களுக்கு தொல்லையை உண்டாக்க காரணமாகிவிடும். 174 இப்பொழுது கவனியுங்கள், 17-வது வசனம், மேலும், அவர் நாற்பது வருஷமாய் யாரை அரோசித்தார்? பாவஞ் செய்தவர்களையல்லவா? அவர்களுடைய சவங்கள் வனாந்திரத்தில் விழுந்து போயிற்றே. பின்னும், என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று அவர் யாரைக் குறித்து ஆணையிட்டார்? 175 அவர்கள் வெளியேப் புறப்படத் துவங்கினர், ஆனால் அவர்கள் அற்புதங்களைக் கண்டனர். ஆயினும் அவர்கள் ஒருபோதும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்தை சென்றடையவில்லை. வெறுமென தெரிந்தெடுக்கப்பட்ட எண்ணிக்கையாக இரண்டு நபர் மட்டுமே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசித்தனர். 176 இப்பொழுது, பவுல் என்ன செய்துகொண்டிருக்கிறான்? அவன், "அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் முன்னர் பிரசங்கிக்கப்பட்ட இந்த அதே சுவிசேஷத்தை நீங்கள் புறக்கணிக்க வேண்டாம். அப்பொழுது அவர்களை அக்கினி ஸ்தம்பம் வழிநடத்தினது. இந்தக் காரியங்கள் மீண்டும் சம்பவிக்கிற பொழுது, நீங்கள் அவிசுவாசத்தினால் சந்தேகமாய் வழியருகே விழுந்து போகாதீர்கள். ஏனென்றால் அவர்களுடைய சவங்கள் வனாந்திரத்தில் விழுந்து போயிற்றே," என்று கிறிஸ்தவர்களிடத்தில் இப்பொழுது பேசிக்கொண்டிருக்கிறான். 177 இப்பொழுது நாம் துரிதமாக பார்த்துக்கொண்டே வருகிறோம். கூர்ந்து கவனியுங்கள். கீழ்ப்படியாதவர்களைக் குறித்ததல்லவா? ஆதலால், அவிசுவாசத்தினாலே அவர்கள் அதில் பிரவேசிக்கக் கூடாமற் போனார்களென்று பார்க்கிறோம். அவன் அதை ஒருமுறை பாவம் என்று அழைக்கிறான், அவன் அதை அடுத்த முறை அவிசுவாசம் என்று அழைக்கிறான். அவிசுவாசமே "பாவமாகும்". "அவர்களுடைய அவிசுவாசத்தினாலே அவர்கள் பிரவேசிக்கவில்லை'' 178 அவர்கள் அந்த தீர்க்கதரிசி மோசேயைக் கண்டிருந்தனர். அவன் என்ன செய்திருந்தான் என்பதை அவர்கள் கண்டனர், அவன் என்னக் கூறினான் என்பதையும் கண்டிருந்தனர். அது உண்மையானதாயும், ஒவ்வொரு முறையும் சத்தியத்தின் பேரிலே செயல்பட்டது. இந்த அக்கினி ஸ்தம்பம் அவர்களுக்கு முன்பாக பிரசன்னமானது. அவர்கள் அதை கவனித்துப் பார்த்தனர். அவர்கள் அதைக் கண்டிருந்தனர். 179 பவுல் தான் கொண்டிருந்த அந்த அனுபவத்தை பின்னர் இங்கே கூற முயற்சித்துக்கொண்டிருந்தான். புரிகிறதா? அந்த அனுபவத்தை விவரித்து கூற முயற்சித்து, அவன் அதை பழைய ஏற்பாட்டிலிருந்து மாதிரியாக எடுத்துக் காட்டினான். அவன், "இப்பொழுது நாம் ஒரு புதிய காரியத்திற்குள், இயேசு கிறிஸ்துவினால் இந்த புதிய யுகத்திற்குள் பிரவேசித்திருக்கிறோம். பழைய ஏற்பாட்டு காலங்களில் கர்த்தர் அவர்களுக்கு தீர்க்கதரிசிகள் மூலம் பிரசன்னமானார். ஆனால் இப்பொழுதோ அவர் தம்முடைய குமாரன் இயேசு மூலம் பிரசன்னமாகிறார்." என்றான். புரிகிறதா? அவன் அந்த அனுபவங்களை மாதிரியாக எடுத்துக் கூறத் துவங்கி, என்ன சம்பவித்துக்கொண்டிருந்தது என்பதை, எப்படி அடையாளங்களும், அற்புதங்களும் மற்றும் உள்ள ஒவ்வொரு காரியமும் இருந்தன என்றும், என்ன எழுதப்பட்டிருந்தது என்பதையும் அவர்களுக்குக் காண்பித்தான். 180 இப்பொழுது அவன், "அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தமாக அவர்கள் பிரவேசிக்கவில்லை " என்றான். அவர்கள் விசுவாசிக்கவில்லை . 181 "ஆனால் இப்பொழுது நாம் ஒரு யுகத்திற்குள்ளாக முன்னோக்கிச் செல்கிறோம், எனவே உங்கள் இருதயங்களை கடினப்படுத்தாதிருங்கள். அந்நாட்களில் கோபமூட்டுதலில், அவர்கள் தேவனைக் கோபமூட்டின்போது நடந்து கொண்டது போல் நீங்கள் நடந்து கொள்ளாதீர்கள். அவர்கள் அதை எப்படிச் செய்தனர்? ஒழுக்கக்கேடான ஜீவியத்தின் மூலமாக அல்ல, நான் இதை உங்கள் மனதில் பதியச் செய்யட்டும். 182 நீங்களோ, "சகோதரன் பிரான்ஹாம், நான் சபைக்குச் செல்கிறேன்" என்று கூறலாம். அதெல்லாம் சரி தான். "நான் என் வாழ்க்கையில் ஒருபோதும் பொய்யுரைத்ததில்லை" எனலாம். அது அருமையானதுதான். "நான் ஒருபோதும் திருடினதில்லை. நான் ஒருபோதும் இதை, அதை அல்லது மற்றதைச் செய்ததேயில்லை" என்று கூறலாம். அது மிகவும் அருமையானதுதான். அதெல்லாம் நல்லதுதான். ஆனால் அது பாவமாயிருக்கவில்லை. 183 பாவம் என்பதோ தேவன் தம்மை காண்பிக்கிறபோது, நீங்கள் அதை அவிசுவாசித்து, நீங்கள் அதற்கு செவிகொடாம லிருப்பதேயாகும். 184 நீங்களோ, "ஓ," "என்னுடைய சபை அதைப் போதிக்கிறதில்லை " என்று கூறலாம். வேதம் அதைப் போதிக்கிற வரையில், தேவன் அதை நீருபிக்கிறார், எனவே அதுதான் முக்கிய காரியமாகும். இப்பொழுது அப்படியே ஒரு விநாடி கவனியுங்கள். இப்பொழுது நாம் உண்மையான ஏதோ ஒரு காரியத்தின்மேல், உண்மையாகவே ஆழமான ஒன்றின் பேரில் துவங்கப் போகிறோம். எனவே நீங்கள் உங்களுடைய மனக் கவனத்தை வெளியே சிதறவிடாமல் கட்டுப்பாடோடு வைத்துக் கொள்ளுங்கள். 185 இப்பொழுது உண்மையாகவே கூர்ந்து கவனியுங்கள். ஆனபடியினாலே அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற் கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க... அவருடைய, அவளுடைய, இப்பொழுது தனிப்பட்ட பிரதி பெயர்கள். என்ன? ...உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்குப் பயந்திருக்கக் கடவோம். 186 இப்பொழுது, பவுல் இந்த எல்லா காரியங்களைக் குறித்தும், முந்தின் அதிகாரத்தில் அவர்களுக்கு கூற முயற்சித்துக்கொண்டிருந்தான். ஆனால் இப்பொழுது அவன் அது என்ன என்பதை அவர்களுக்குக் கூற முயற்சித்துக் கொண்டிருக்கிறான். ஓ, நமக்கு நேரம் உள்ளதா? நான்... ஒருகால் நாம் இன்றிரவு வரை காத்திருப்பது மேலாகும். நேரம் தாமதமாகிக்கொண்டே போகிறது, நாம் ஜெப ஆராதனையை நடத்தப் போகிறோம். ஒருகால் நாம் அதை இன்றிரவு மேலாக புரிந்து கொள்ளலாம், ஏனென்றால் இது உண்மையாகவே முழுவதும் ஊட்டச் சத்துக்களால், ஆவிக்குரிய ஊட்டச் சத்துக்களால் நிறைந்துள்ளது. ஏராளமானவற்றைச் செய்ய வேண்டும், நான் இன்று பிற்பகல் மிகுந்த பணியில் சற்றேனும் ஓய்வின்றி உள்ளேன். "நாம்...'' ...வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க... பின்வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்கு பயந்திருக்கக்கடவோம். 187 இப்பொழுது, அவர்கள் எகிப்தில் இருந்தபோது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கான வாக்குத்தத்தத்தை பெற்றிருந்தார்களா? இந்த வாக்குத்தத்தத்தை ஒரு மெய்மையாக்கவே தேவன் இறங்கி வந்தார். ஏன்? தேவன் நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்னரே அதைச் செய்யப்போவதாக ஆபிரகாமிடத்தில் கூறியிருந்தார். அது வேதப்பிரகாரமானதாயிருந்தது. 188 யோசேப்பு, "நீங்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு செல்ல புறப்படும் வரையில் இங்கிருந்து என்னுடைய எலும்புகளை எடுக்க வேண்டாம், அங்கே கொண்டுபோய் என் பிதாக்களோடு என்னை அடக்கம்பண்ணுங்கள்" என்றான். யோபு என்னக் கூறியிருந்தான் என்பதை அவன் அறிந்திருந்த காரணத்தால், இயேசுவானவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழும்போது, உயிர்த்தெழுதல் உண்டாகப் போகிறது என்பதையும் அவன் அறிந்திருந்தான். புரிகிறதா? 189 ஒவ்வொரு தீர்க்கதரிசியும் மற்ற தீர்க்கதரிசி என்னக் கூறியிருந்தான் என்பதை அறிந்திருந்தான். அவர்களுடைய ஆவி ஒரேவிதமாக இருந்ததையும் அறிந்திருந்தனர். எனவே அவர்கள் கவனித்துக் கொண்டிருந்தனர். ஓ, சகோதரனே! ஓ, அது நம்முடைய உலகப்பிரகாரமான நிலைமையை நம்மிடத்திலிருந்து உலுக்கி எடுக்க வேண்டியதாயிருக்கிறது. அவர்கள் தங்களுடைய கண்களை ஜனங்கள் என்ன கூறிக்கொண்டிருந்தனர் என்பதன் பேரில் வைத்துப் பார்க்காமல், தீர்க்கதரிசிகள் என்னக் கூறியிருந்தனர் என்பதன் பேரில் வைத்து கவனித்திருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் கவனித்துக் கொண்டிருந்தனர். 190 ஆபிரகாம், "யோபு அடக்கம்பண்ணப்பட்ட அந்த இடத்தில் என்னை அடக்கம் பண்ணுங்கள்" என்றான். மேலும் அவன் "சாராளே, நான் ஒரு துண்டு நிலத்தை வாங்கப் போகிறேன். நாம் சரியாக அங்கேயே அடக்கம்பண்ணப்படப்போகிறோம்." என்றான். 191 தன்னுடைய தந்தைக்குப் பிறகு ஈசாக்கு ஒரு தீர்க்கதரிசியாய் இருந்தான். அவன், "கவனியுங்கள். என்னை இங்கே எகிப்தில் உள்ள எந்த இடத்திலும் அடக்கம் பண்ணாதீர்கள், ஆனால் நீங்கள் என்னை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு எடுத்துக்கொண்டு செல்லுங்கள். நீங்கள் என்னை அங்கே அடக்கம்பண்ணுங்கள்" என்றான். 192 யாக்கோபு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு செல்லும் முன்னரே மரித்தான். ஆனால் ஒரு தீர்க்கதரிசியாயிருந்த தன்னுடைய மகனிடத்தில் இவ்வாறு கூறினான். அவன், "உனக்குத் தெரியுமா? ஒரு இரவு தூதன் என்னை தொடைச் சந்திலேத் தொட்டார். அது முதற்கொண்டு நான் நொண்டி நடந்து வருகிறேன். வந்து உன்னுடைய கரத்தை வை...'' என்றான். ஓ, இரக்கம்! "என் மகனாகிய தீர்க்கதரிசியே, நான் வயோதிகனும், குருடனுமாயிருக்கிறேன். ஆனால் நீயோ ஒரு தீர்க்கதரிசியாயிருக்கிறபடியால், தூதனானவர் தம்முடைய கரத்தினால் என்னைத் தொட்ட அந்த இடத்தில் உன்னுடைய பரிசுத்த கரத்தை வைத்து, நீ என்னை இங்கு அடக்கம்பண்ணமாட்டாய் என்று பரலோகத்தின் தேவன் பேரில் ஆணையிடு" என்று கூறினான். 193 ஸ்தோத்திரம் உண்டாவதாக! அங்கே வார்த்தையின் ஆவிக்குரியப்பிரகாரமான வெளிப்பாட்டை நீங்கள் புரிந்து கொள்ளுகிறீர்களா? ஏன்? அவர்களில் பாதிபேர், கிட்டத்தட்ட தொண்ணூறு சதவீதம் அவன் என்ன பேசிக்கொண்டிருந்தான் என்பதை அறிந்திருக்கவில்லை. ஆனால் அவன் எதைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறான் என்பதை அவன் அறிந்திருந்தான். "தூதனானவர் தம்முடைய கரத்தை வைத்த இந்த இடத்தில் தீர்க்கதரிசியாகிய நீ உன்னுடைய கரங்களை வை, நான் ஒரு காலத்தில் ஒரு பெரிய தடித்த மனிதனாய், ஒரு சூதுவாதற்ற கோழையாய் இருந்தேன். ஆனால் அவர் என்னைத் தொட்டார், அது முதற்கொண்டு நான் ஒரு நொண்டி நடக்கிற மனிதனாய் இருந்துவருகிறேன். ஆனால் நான் நொண்டி நடக்கத் துவங்கினது முதற்கொண்டு ஒரு இளவரசனாய் இருந்து வருகிறேன். என்னுடைய நடையின் முறையை நான் மாற்றினது முதற்கொண்டு, நான் ஒரு இளவரசனாய் இருந்து வருகிறேன்.'' ஆம். "உன்னுடைய கரத்தை இங்கே வை. நீ என்னை இங்கே அடக்கம்பண்ணமாட்டாய் என்று பரலோகத்தின் தேவனைக் கொண்டு ஆணையிடு" என்றார். ஏன்? அவன் எதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறான் என்பதை எவரும் அறிந்திருக்கவில்லை. ஆனால் யோசேப்பு அறிந்திருந்தான். எனவே யாக்கோபு, "என்னை இங்கிருந்து கொண்டு சென்று, அந்த வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்தில் என்னை அடக்கம்பண்ணு" என்றான். அங்கேதான் அது இருந்தது. நிச்சயமாக. 194 அதன்பின்னர் பல வருடங்கள் கழித்து யோசேப்பு மரித்த போது, அவன் மரிப்பதற்கு முன்பு, "நீங்கள் என்னை இங்கு அடக்கம்பண்ணாதீர்கள். நீங்கள் எகிப்திலிருந்து கடந்து செல்லும்போது, என்னுடைய எலும்புகளை நோக்கிப் பார்ப்பீர்கள், ஏனென்றால் நீங்கள் என்றோ ஒரு நாளில் இங்கிருந்து போகப்போகிறீர்கள். நீங்கள் போகும்போது, என்னுடைய எலும்புகளை உங்களோடு கொண்டு செல்லுங்கள்" என்று கூறியிருந்தான். 195 அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. உலகம் என்ன கூற விரும்புகிறதோ அதைக் கூறட்டும், உலகம் என்ன செய்ய விரும்புகிறதோ அதைச் செய்யட்டும். கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக. நான் ஒரு மதவெறியன்... அல்லது பரிசுத்த உருளை என்று எப்படி அழைக்கப்பட்டாலும், கிறிஸ்துவுக்குள் என்னை காத்துக் கொள்வேனாக. என்றோ ஒரு நாள் அவர் வருகிறார், அவர் வரும்போது, கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களை தேவன் அவரோடு கொண்டு வருவார். அவையாவும் ஆவிக்குரியப் பிரகாரமாக் வெளிப்படுத்தப்பட்ட சத்தியமாகவே அங்கே உள்ளது, எனவே அதைப் புரிந்துகொள்ள ஒரு ஆவிக்குரிய சிந்தை தேவைப்படுகிறது. நாள் முழுவதும் அதன்பேரில் இளைப்பாறுங்கள். அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் உங்களுடைய இரவு உணவை புசிக்கவில்லையென்றாலும், அதைக் குறித்து சிந்தியுங்கள். 196 இன்றிரவு நம்குண்டாயிருக்கிற அவருடைய இளைப்பறுதலுக்குள் நாம் சென்று, இன்றைக்கு இந்த வாக்குத்தத்தம் என்னவாய் உள்ளது என்று பார்ப்போம். இன்றைக்கு இந்தக் காரியம் என்னவாயுள்ளது? தேவன் அதை இங்கே வேதாகமத்தில் கூறாமலிருந்து, அதை நிரூபிக்காமலிருந்து, அது இப்பொழுது இங்கே உள்ளது என்று நான் கூறினால், அப்பொழுது நான் ஒரு கள்ளத் தீர்க்கதரிசியாயிருக்கிறேன். அது முற்றிலும் சரியே, ஆனால் அதுவோ இங்கு உள்ளதே! இந்த இளைப்பாறுதல் என்னவாயுள்ளது? 197 அவன் கூறினான்: ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க அவர்கள் செய்தது போல... அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்குப் பயந்திருக்கக் கடவோம். 198 அது அதே வாக்குத்தத்தமாய் இருக்க வேண்டும். அது அதே இளைப்பாறுதலாய் இருக்க வேண்டும். அது அதே தேவனாய் இருக்க வேண்டும். அது அதே அடையாளங்களாய் இருக்க வேண்டும். அது அதேக் காரியமாய் இருக்க வேண்டும். ஆனால் நாம் இளைப்பாறுவோமாக. இப்பொழுது அது என்னவாயிருக்கிறது? கர்த்தர் அதை இன்றிரவு நமக்கு அருளுவாராக. நாம் நம்முடைய தலைகளை வணங்குவோம். 199 ஸ்தோத்தரிக்கப்பட்ட கர்த்தாவே, நித்தியம் மாத்திரமே நாங்கள் இப்பொழுது ஒன்று சேர்ந்து பகிர்ந்து கொள்கிற மகத்தான காரியங்களை வெளிப்படுத்தும். சிறிய... அநேகர் ஆக்கினைத்தீர்ப்புக்கென்று நியமிக்கப்பட்டிருக்கின்றனர். யூதா புத்தகத்தில் நீர் கூறியிருப்பதுபோல, "நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி சிலர் பக்கவழியாய் நுழைந்திருக்கிறார்கள். அவர்கள் இந்த ஆக்கினைக்குள் ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது." இன்றைக்கு சுவிசேஷத்தை பிரசங்கித்துக் கொண்டிருக்கிற அநேகர் தேவனுடைய கிருபையை ஒரு பணம் சம்பாதிக்கும் திட்டத்திற்குள்ளாகப் புரட்டி, மிகப்பெரிய ஒரு சபையையும், பெரும்பாலும் ஞாயிறு வேதபாடபள்ளியையும் உடையவர்களாய், தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டுகிறார்கள். உலகமோ குருடாய், குருடான பன்றிகளைப் போல போய்க்கொண்டிருக்கிறது. அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. 200 ஓ தேவனே, எங்களுடைய புரிந்து கொள்ளுதலை பெற்றுக்கொள்ளும்படி எங்களுடைய மனதைத் திறந்தருளும். எங்களுடைய புரிந்துகொள்ளுதல் இப்பிரபஞ்சத்தின் பிள்ளைகளைப் போன்றதாயில்லாதிருப்பதாக. ஏனென்றால் நீர் உம்முடைய வார்த்தையில், "இவ்விதமாய் ஒளியின் பிள்ளைகளைப் பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள்" என்று கூறியிருக்கிறீர். ஆதியில் அவ்வண்ணமாய் இருந்தது, காயீனின் புத்திரர்கள் மிகப்பெரிய புத்தியுள்ள விஞ்ஞானிகளானார்கள். அவர்கள் பெரிய கல்வியாளர்களானார்கள். அவர்கள் மூலப்பொருட்களின் தொழிலாளர்களானார்கள். அவர்கள் செழித்தோங்கி, மிகவும் பக்தியுள்ளவர்களானர்கள், ஆனால் ஆக்கினைக்குட்படுத்தப்பட்டு, நியாயத்தீர்ப்பில் அமிழ்ந்து, அழிந்துபோயினர். அவர்களுடைய பிரதேங்கள் தண்ணீரில் மிதந்தன. அவர்களுடைய ஆத்துமாக்களோ நரகத்திற்கு சென்றன. 201 இயேசுவானவர் மரித்த போது, அவர் சென்று அவர்களிடத்தில் பேசினார். வேதமோ, "அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார். அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்படியாமற்போனவைகள்" என்று உரைக்கிறது. தேவன், அவர் பூமியின் மேலிருந்தபோது, அவர், "நோவாவின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்" என்றார். 202 ஆனால் நாம் கவனித்துப் பார்ப்போமேயானால், "சேத்தினுடைய வம்ச வரலாற்றில்" தாழ்மையான் மனிதர்களும், உண்மையான தேவனுடைய மனிதர்களும் தோன்றி, உலகத்தின் காரியங்களைக் குறித்து அதிகம் அறிந்திராமல், உலகத்தின் காரியங்களுக்காக எந்த கவலையும் கொள்ளாமல், பாரமான யாவற்றையும் தள்ளி வைத்துவிட்டு, தேவனை விசுவாசித்து, தீர்க்கதரிசிகளாகி, தேவனுடைய இராஜ்ஜியத்தில் மகத்தான மனிதர்களாயினர். மற்றவர்கள், உலகிலுள்ள மதசம்பந்தமான மற்றவர்கள் அவர்களை பார்த்து நகைத்து, அவர்களைப் பரிகசித்தனர். ஆனால் நேரம் வந்தபோது, ஜலப்பிரவாகமும், நியாயத்தீர்ப்பும் உண்டானது. 203 அது அவ்வண்ணமாகவே இயேசு கிறிஸ்துவின் வருகையிலும் இருந்தது. எப்படியாய் அவர்கள் நகைத்து, அவரைக் குறித்து பரியாசம் செய்தனர். அவர்கள் தங்களுடைய சொந்த பக்திமார்க்கங்களையும், தங்களுடைய பெரிய சபைகளையுமே உடையவர்களாயிருந்தனர். ஆனால் அவர்கள் அந்த விடிவெள்ளி நட்சத்திரத்தைக் குறித்து பரிகசித்து, அவர்கள் அவரை எள்ளி நகையாடினர். ஆனால் அதே சமயத்தில் அவர்கள் நியாயத்தீர்ப்பிற்குள் பிரவேசித்தனர். அவர்கள் எருசலேமுக்குள் ஓடிச் சென்று, தங்களுடைய சொந்த பிள்ளைகளையே பட்டினியின் காரணமாகப் புசித்தனர். அவர்கள் அந்த நகரத்தையும், தேவாலயத்தையும் சுட்டெரித்தபோது, அவர்களுடைய இரத்தம் வீதியிலே ஓடியது. அவர்களுடைய ஆத்துமாக்களோ நரகத்திற்கு சென்றன. 204 கர்த்தாவே, நாங்கள் இங்கே மூன்றாவதாக மீண்டும் இருக்கிறோம். இதுவோ ஜீவனின் நேரமாயுள்ளது. மூன்று என்பது ஜீவனின் எண்ணாயுள்ளது. நாங்கள் இங்கே ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதற்காக ஆயத்தமாயிருக்கிறோம். சபையானது இந்த மகத்தான விஞ்ஞான உலகத்தில் முன்னோக்கிச் செல்கிறது. சபைகளோ இன்றைக்கு சந்தேகப்படுகின்ற விசுவாசிகளால் முழுவதும் நிறைந்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் தங்களுடைய பெயர் சபைப் புத்தகத்தில் இருப்பதால், ஆம், கோடிக்கணக்கானவர்கள், "அவர்கள் கல்வியறிவற்றவர்கள். அவர்களுக்கு ஒன்றும் தெரியாது" என்று கூறி, சுவிசேஷத்தைக் குறித்து கேலியாக நகைக்கிறார்கள். கர்த்தாவே, அது அவ்வண்ணமாயிருக்கலாம், ஆனால் நாங்கள் கல்வியில் குறைவுள்ளவர்களாயிருக்கிறோம், நீரோ எங்களை கிருபையில் சரிசெய்து உருவாக்குகிறீர். உம்முடைய தூதனின் ஒளியை அனுப்புவதன் மூலம், தம்முடைய வல்லமையை வெளிப்படுத்துவதன் மூலம், எங்களைப் போன்ற ஏழ்மையும், படிப்பறியாதவர்களுக்கும் வார்த்தைகளை உறுபடுத்துகிறீர். ஆனால் நாங்கள் இதற்காக உம்மை நேசிக்கிறோம், ஏனென்றால் தேவனுடைய கிருபையே இதைச் செய்துள்ளது. நாங்கள் மீண்டும் பிறந்துள்ளோம் என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் கவர்ச்சி வாய்ந்தவர்கள் அல்ல. நாங்கள் மிகவும் கவர்ச்சியற்றவர்களாகவே இருக்கிறோம். ஆனால் நீரோ கிருபையினூடாக உம்முடைய இரக்கமுள்ள கரத்தைக் கொண்டு, இயேசுவானவர் எங்களுக்காக ஜெபித்தது போன்று, எலியா கேயாசிக்கு செய்தது போல், அப்பொழுதே அவன் சுற்றிலும் நோக்கிப் பார்த்தான். அதுபோல நீர் எங்களுடைய கண்களைத் திறந்திருக்கிறீர். இன்றைக்கு எங்களுடைய கண்கள் திறக்கப்பட்டுள்ளன, நாங்கள் தேவனுடைய காரியங்களைக் காண்கிறோம். நாங்கள் முடிவின் நேரத்தில் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்பதை அறிவோம். புறஜாதியாரின் நாட்கள் கிட்டத்தட்ட முடிவடைகின்றபோது, அவரோ தம்முடைய நாமத்திற்காக தெரிந்து கொண்ட ஒரு ஜனத்தை எடுத்துக் கொள்வார். கர்த்தாவே நாங்களும் அங்கே சேர்க்கப்படுவோமாக என்றே நாங்கள் தாழ்மையாய் கெஞ்சி மன்றாடுகிறோம். நீர் அதை அருளவேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். 205 எங்களை ஆசீர்வதியும். இந்தக் காலையில் இந்த கூட்டத்தினரை ஆசீர்வதியும். அவர்கள் பல்வேறுபட்ட எல்லாவிதமான மார்க்கங்களையும், நம்பிக்கைகளைக் கொண்டும் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள், தேவனே, ஆனால் அவைகளை இன்றைக்கு ஒருபுறம் தள்ளிவைப்பார்களாக. அவர்கள் நேராக கல்வாரியை நோக்கிப் பார்த்து "தேவனே, என்னை வனையும், என்னை உருவாக்கும், நான் களிமண்ணைப் போலிருக்கிறேன்" என்று கூறுவார்களாக. தீர்க்கதரிசி தான் குயவனுடைய வீட்டிற்கு சென்றதையும், குயவன் வனைந்து கொண்டிருந்த மண்பாண்டம் உடைந்து போனபோது, அவன் திரும்ப வேறு பண்டமாக வனைந்ததையும் அவன் கூறினான். தேவன் எங்களை வைத்திருக்க விரும்புகிற அமைப்பு முறைக்கேற்ப எங்களை வனையும், எங்களை உருவாக்கும். கர்த்தருடைய வீட்டில் நாங்கள் மிதியடியாயிருக்க வேண்டிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லையே. ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப் பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்து கொள்வேன். கர்த்தாவே அதை அருளும். இப்பொழுதே எங்களை ஆசீர்வதியும், நாங்கள் தாழ்மையாயிருக்கும்படி காத்துக்கொள்ளும். தேவனுடைய காரியங்களுக்கு எங்களுடைய இருதயங்கள் திறக்கப்பட்டு, எங்களுடைய சிந்தைகள் தெளிவாயிருப்பதாக. ஏனென்றால் நாங்கள் இதை கிறிஸ்துவினுடைய நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். 206 நம்முடைய தலைகள் வணங்கியிருப்பதோடு, உங்களுடைய ஆத்துமா இரட்சிப்பிற்காக எவரேனும் ஜெபத்தில் நினைவு கூரப்பட வேண்டுமென்று விரும்புகிறீர்களா என்று நான் வியப்புறுகிறேன். ஒரு பாவியாக இருக்கிற நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்துவீர்களா? தேவன் வாலிப நபராகிய உங்களை ஆசீர்வதிப்பாராக. வேறுயாரேனும் இருக்கிறீர்களா? ஐயா, அங்கே பின்னால் உள்ள உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக. பெண்மணியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களுடைய ஆத்துமாவிற்காக இப்பொழுது ஜெபத்தில் நினைவு கூரப்பட வேண்டுமென்று வேறுயாரேனும் விரும்புகிறீர்களா? ஐயா, உங்களுடைய கரத்தை உயர்த்தியிருப்பதால் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இங்கே உள்ள உங்களை, உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக. அற்புதம். முடிப்பதற்கு முன்பாக வேறுயாரேனும் இருக்கிறீர்களா? யாராவது இருப்பார்கள் என்றே நான் உணருகிறேன். ஐயா, அங்கே மிகவும் பின்னால் உள்ள உங்களை தேவன் ஆசீவதிப்பாராக. 207 இப்பொழுது பாருங்கள், நான் உங்களை ஒரு காரியம் கேட்க விரும்புகிறேன். இதுவோ இந்த சிறிய கூடாரத்தில் உள்ள காரணத்தால் நான் கூறுகிறேன் என்று நீங்கள் ஒருபோதும் நினைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. இது இந்த ஜனங்களிடத்தில் உள்ள காரணத்தால் நான் கூறுகிறேன் என்று நீங்கள் ஒருபோதும் நினைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. இரக்கமுள்ள தேவன், இது கர்த்தருடைய தூதன் தம்முடைய புகைப்படத்தை என்னோடு எடுத்துக் கொண்ட காரணத்தால் என்று எண்ணிக்கொள்ள வேண்டாம். அதைச் செய்ய, அதைக் குறித்த ஏதோ ஒரு காரியம் உண்டு....ஓ தேவனே! நான் அந்த விதமாக உணர்ந்திருந்தால், அப்பொழுது, சகோதரனே, உங்களிடத்தில் ஒன்றைக் கேட்பதற்கு பதிலாக நான் அதை திருத்திக் கொள்ள வேண்டும். ஆனால் நான் இதை மாத்திரம் கூறிக்கொண்டிருக்கிறேன், இது சத்தியம் என்று நீங்கள் காணும்படியாக நான் இதை வேதவாக்கியத்தின் மூலமே கூறிக்கொண்டிருக்கிறேன். நான் அதை கூறியிருந்தால், மற்றெந்த பிரசங்கியையும் போல் அல்லது வேறு யாரையும் போல அல்லது மற்ற எவரையும் போல கூறியிருந்தால், அப்பொழுது அது வித்தியாசமாயிருக்கும். ஆனால் நீங்கள் அந்தக் காரியத்தைப் புரிந்துகொள்ளுகிறீர்கள், எனவே தேவன் அதற்குப் பின்னே வந்து, அது சத்தியமாயிருக்கிறது என்று நிரூபிக்கிறார். புரிகிறதா? அதுவே அதனை உண்மையாக்குகிறது, தேவன் அதை நிரூபித்துக்கொண்டிருக்கிறார். அப்படியானால், அது மாத்திரமல்ல, ஆனால் அவர் அதைச் செய்வார் என்று அவருடைய வார்த்தைக் கூறுகிறது. இங்கேயோ அவர் அதை செய்து கொண்டிருக்கிறார். 208 இப்பொழுது நீங்கள் சரியில்லையென்றால், உங்களுடைய இருதயம் தேவனோடு சரியாயில்லையென்றால், நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்துவீர்களா? "எனக்காக ஜெபியுங்கள்" என்று கூறுங்கள். நீங்கள் எங்கே இருந்தாலும் சரி, கிட்டத்தட்ட எட்டு அல்லது பத்து கரங்கள் தங்களுடைய ஆத்துமாவிற்காக இரக்கம் தேவை என கரங்களை உயர்த்தியுள்ளனர். நீங்கள் உங்களுடைய தலைகளை வணங்கியிருக்கையில், இப்பொழுது நீங்களே ஜெபியுங்கள். நினைவிருக்கட்டும், நீங்கள் தான் மனந்திரும்ப வேண்டும். தேவன் இரக்கமாயிருக்க வேண்டும் என்று நான் உங்களுக்காக வேண்டிக்கொள்கிறேன். ஆனால் இது பீடமாய் உள்ளது, தேவன் உங்களுடைய சிந்தையில் உங்களுக்கு ஒரு இடத்தை கொண்டுவந்துள்ளார். அதுவே பீடமாயுள்ளது. பீடத்தண்டை வருவதில் நாங்கள் நிச்சயமாகவே நம்பிக்கைக் கொண்டுள்ளோம், ஆனால் அதைச் செய்கிறதோ... அது சரிதான். ஆனால் தேவன் உங்களை சந்தித்துள்ள இடமே உங்களுடைய உண்மையான பீடமாயுள்ளது. நீங்கள் எங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்களோ அங்கேயே அவர் உங்களை சந்தித்துள்ளார். அதுவே உங்களுடைய பீடமாயுள்ளது. 209 இப்பொழுது, "தேவனே, ஒரு பாவியாகிய என்னிடத்தில் இரக்கமாயிரும். இந்நாளிலிருந்து நீர் எனக்கு உதவி செய்வீரேயானால், அப்பொழுது நான் உமக்காக ஜீவிப்பேன். நான் உம்மையே சேவிப்பேன். எவர் என்ன கூறினாலும் நான் கவலைப்படுவதில்லை. நான் இந்தக் காலையில் நான் அதைக் கடந்து வந்துகொண்டிருக்கிறேன். நீர் இந்த பழைய மரியாதையற்ற ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துப் போடும் என்று நான் இங்கிருந்து ஜெபித்துக்கொண்டிருக்கிறேன். நீர் இந்த கோபத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப் போடும். நான் அந்தவிதமாக நடந்துகொண்டு, அதே சமயத்தில் தேவனோடு சரியாயிருக்க முடியாது என்பதை நான் அறிவேன். நான் என் இருதயத்தில் பெறும் வெறுப்பு கொண்டுள்ளேன். நான் பொறாமை கொண்டுள்ளேன், நான் துர்குணம் கொண்டுள்ளேன். நான் இதையும், அதையும் கொண்டவனாயிருக்கிறேன். தேவனே அதை எடுத்துப் போடும். நான் அந்த விதமாக இருக்க விரும்பவில்லை. என்னை இனிமையாகவும், தாழ்மையுள்ளவனாகவும், சாந்தமுள்ளவனாகவும் உருவாக்கும். என்னை கனிவுள்ளவனாக உருவாக்கும். நான் உமக்கு மற்றவர்களை ஆயத்தம் செய்யக் கூடிய ஒரு நபராக என்னை உருவாக்கும். என் ஜீவியத்தில் உள்ள பாராட்டுதல்களை காண்பிக்கும்படிக்கு, நான் உமக்காக ஏதோ ஒரு காரியத்தைச் செய்யட்டும்" என்று கூறுங்கள். நாம் ஒன்று சேர்ந்து ஜெபிக்கையில், இப்பொழுது அந்த ஜெபத்தையே நீங்கள் ஜெபிக்க வேண்டும். 210 பரலோக பிதாவே, அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்கள். அவர்கள் இந்த காலை செய்தியின் கனிகளாயிருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய கரத்தை உயர்த்தினர். ஏதோ ஒன்று அவர்கள் அதைச் செய்யும்படிச் செய்தது. அவர்கள் தங்களுடைய கரங்களை உயர்த்தினபோது, அவர்கள் புவி ஈர்ப்பு விசையின் பிரமாணங்களை மீறினர். அவர்களுக்குள்ளிருந்த ஒரு ஆவியே இந்த ஒரு தீர்மானத்தைச் செய்தது. அவர்கள் தங்களை சிருஷ்டித்த சிருஷ்டிகரை ஏற்றுக்கொண்டனர் என்றே அவர்கள் தங்களுடைய கரங்களை உயர்த்தினர். 211 இப்பொழுதும், பரலோகப் பிதாவே, நீர் அவர்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்றும், இப்பொழுதே அவர்களுக்கு நித்திய ஜீவனை அருள வேண்டும் என்றும் நான் ஜெபிக்கிறேன். என்னால் செய்ய முடிந்ததோ வேறொன்றுமில்லை, அவர்களை பீடத்தை சுற்றிலுமாய் வரும்படி அழைத்து, அவர்களை கூடுதலான அறையில் அமரவைத்து, எல்லா வேலையும் செய்கிறேன். கர்த்தாவே, நித்திய ஜீவனைத் தர நீரே தேவைப்படுகிறீர். நாங்கள் வார்த்தையைப் பிரசங்கிக்க முடிந்ததைத் தவிர வேறொன்றையும் செய்ய முடியாது. நீர், "விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்" என்று கூறினீர். இப்பொழுது நாங்கள் வார்த்தையைப் பிரசங்கித்துள்ளோம், அவர்களோ அதை விசுவாசித்துள்ளோம் என்றே அவர்கள் தங்களுடைய கரங்களை உயர்த்தியுள்ளனர். இப்பொழுதே நீர் அவர்களுக்கு நித்திய ஜீவனைத் தாரும், ஏனென்றால் நீர் அதை அளிப்பதாக வாக்குப்பண்ணினீர். அவர்கள் தங்களுடைய கரங்களை உயர்த்தியிருப்பதில் உத்தமாயிருந்தால், அவர்கள் இந்தக் காலையில் ஒரு இனிமையான, சாந்தமான, தாழ்மையான கிறிஸ்தவராக இந்தக் கட்டிடத்தைவிட்டு வெளியே செல்வார்களாக, ஏனென்றால் நீரே அதை வாக்குப்பண்ணினீர். உம்முடைய வார்த்தைகள் தவறிப் போக முடியாது. நான் அதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறேன். ஆமென். யோவான் இறங்கி வரக் கண்ட அந்த பிரகாசமான நகரத்திற்காகவே இப்பொழுது நான் காத்துக் கொண்டிருக்கிறேன், காத்திருந்து வாஞ்சிக்கிறேன். அந்த பிரகாசமான நகரத்தில், (இப்பொழுது ஆராதியுங்கள்), எனக்கு ஒரு வாசஸ்தலமும், ஒரு சுரமண்டலமும், ஒரு கிரீடமும் உண்டு; யோவான் இறங்கி வரக்கண்ட அந்தப் பிரகாசமான நகரத்திற்காகவே, இப்பொழுது நான் காத்துக் கொண்டிருக்கிறேன், காத்திருந்து, வாஞ்சிக்கிறேன். 212 நீங்கள் அவரை நேசிக்கவில்லையா? இப்பொழுது செய்தியானது முடிந்துவிட்டது. இது ஆராதிப்பதாயுள்ளது. நாம் வெறுமென ஒரு செய்தியைக் கேட்க சபைக்கு வருகிறதில்லை. நாம் ஆராதிக்க வருகிறோம். உங்களுக்கு அடுத்தபடியாக அமர்ந்துள்ள நபரைக் குறித்து மறந்துவிடுங்கள். அப்படியே அவரை ஆராதியுங்கள். ஓ, எவ்வளவு அழகாயுள்ளது! எவ்வளவு அற்புதமானது! அப்படியே அவரிடத்தில் கூறுங்கள். நீங்கள் அவரிடத்தில் சத்தமாகக் கூற வேண்டியதில்லை. அப்படியே உங்களுடைய இருதயத்தில் இருந்து, "கர்த்தாவே, நான் உம்மை நேசிக்கிறேன். என்னுடைய பாவத்தை எனக்கு மன்னியும்" என்று அவரிடத்தில் சொல்லுங்கள். ஓ, என்னே ! - முத்துக்களினாலான வெள்ளை நகரத்தில், எனக்கு ஒரு வாசஸ்தலமும், ஒரு சுரமண்டலமும், ஒரு கிரீடமும் உண்டு; யோவான் இறங்கி வரக் கண்ட அந்த வெள்ளை நகரத்திற்காகவே, இப்பொழுது நான் காத்துக்கொண்டிருக்கிறேன், காத்திருந்து வாஞ்சிக்கிறேன். 213 எங்கள் பிதாவாகிய தேவனே, எங்களை ஏற்றுக்கொள்ளும். நாங்கள் கேட்டுக்கொண்டும், வாஞ்சித்துக்கொண்டுமிருக்கிற காரணத்தால் நாங்கள் அந்த நகரத்திற்கு காத்துக்கொண்டிருக்கிறோம். "மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, எங்களுடைய இருதயங்கள் உம்மேல் தாகமாயிருக்கின்றன. ஓ, தேவனே, எங்களுடைய ஆத்துமாக்கள் உம்மேல் தாகமாயிருக்கின்றன. வாஞ்சித்து காத்திருக்கிறோம், அந்த நேரத்திற்கே, அதாவது இயேசு வரும்போது, ஆகாயத்தில் சந்திக்க நாங்கள் அழைக்கப்படவிருக்கும் அந்த நேரத்திற்கே காத்திருக்கிறோம். நியாயத்தீர்ப்பில் நியாயாதிபதிக்கு முன்பாக நிற்பதற்கு அல்ல; அது முடிந்துவிட்டது. நாங்கள் உலகத்தின் காரியங்களுக்கு மரித்தவர்களாயிருக்கிறோம். நாங்கள் கிறிஸ்துவுக்குள் பிரவேசித்திருக்கிறோம், அவர் எங்களுடைய நியாயத்தீர்ப்பை எடுத்துக்கொண்டார். அவரே இப்பொழுது நியாசனத்தில் உள்ள எங்களுடைய வழக்கறிஞராயிருக்கிறார். எங்களுடைய அறிக்கையின் பேரிலான எங்களுடைய ஸ்தோத்தரிக்கப்பட்ட, நாங்கள் அபாத்திரர் என்பதை நாங்கள் அறிந்து கொள்ளுமளவிற்கு அவர் எங்களுடைய வழக்கை குறித்து வழக்காடுகிறார். ஒரு அருமையான வயோதிக சகோதரி இந்தக் காலையில், தன்னுடைய சாட்சியில் கூறி, தன்னுடைய காசுகளை காணிக்கைப் பெட்டியில் போட்டது போல், அவர், "இது என்னுடைய பரிசுத்தம் அல்ல, இது தேவனுடைய பரிசுத்தமாயிருக்கிறது என்பதை நான் இங்கு வந்தது முதற்கொண்டு கற்றுக்கொண்டேன்" என்றார். 214 உண்மையாகவே மனிதனுக்குள் நன்மையான எந்த ஒரு காரியமும் இல்லை, எந்த ஒரு காரியமும் இல்லை என்றே கர்த்தாவே நாங்கள் ஜனங்களுக்குப் போதிக்கிறோம். "மனுஷனை நீர் நினைக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்?" ஆனால் அதுவோ தேவனுடைய கிருபை எங்களுக்கு பிரசன்னமானதாயிருக்கிறது. நாங்கள் எங்களுடைய தகுதியின் பேரில் அல்ல, இதற்கு பாத்திரமாக்கின அவருடைய நற்பண்புகளில் மாத்திரம் நம்பிக்கை கொண்டுள்ளோம். உம்முடைய மகத்தான இராஜ்ஜியத்தில், உம்முடைய மகத்தான திட்டத்தில் எங்களை சேர்ந்துக்கொள்ளும்படியான உம்முடைய நன்மைக்காக மகா பரிசுத்த தேவனாகிய உம்மை ஆராதிக்கிறோம். நாங்கள் விசுவாசத்தினால் உம்மை எங்களுடைய இருதயங்களில் ஏற்றுக்கொள்கிறோம். கிருபையினால் நீர் இதை தேவனுடைய மகிமைக்காக, தேவனுடைய பணிக்காக அளித்துள்ளீர் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். 215 இப்பொழுது, கர்த்தாவே, இந்தக் காலையில் ஜெபிக்கப்படுவதற்காக வந்துள்ள வியாதியஸ்தரை குணப்படுத்தும். அவர்களுக்கு சந்தோஷத்தைத் தாரும், அவர்கள் சுகமாயிருக்க வேண்டும் என்று வாஞ்சிக்கிறார்கள். இந்த சிறிய இலேசான இன்னல் வெறுமென ஒரு சிறிய சோதனை நேரத்தில் அவர்கள் மேல் வைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்களாக. தேவன் அதைக் குறித்த எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். இதைக் குறித்து நாங்கள் என்ன செய்வோம் என்பதை காணும்படிக்கே அவர் அதைச் செய்தார். தேவனே எப்படியாய்.. அவர்கள் அங்கிருந்து அடியெடுத்து வைத்து, அந்த முடிவு பெற்ற கிரியை உரிமை கோருவார்களாக! அவர்கள் இங்கும் அங்கும் ஓடி, உள்ளும், வெளியும் போய், "எனக்கு இதை, அதைத் தெரியாது" என்று கூறுவதன் மூலம் உம்மை கோபமூட்டாதிருப்பார்களாக, 216 கர்த்தாவே, அவர்கள் ஒரு நேர்மையான பின்னிடா உறுதியான தீர்மானத்தை எடுத்து, "கர்த்தாவே, நீரே என்னை இரட்சித்தீர். நீரே எனக்காக இந்தக் காரியங்களைச் செய்தீர். நாம் உம்மை விசுவாசிக்கிறேன், நான் இன்றைக்கும் உம்மையே நம்பிக்கொண்டிருக்கிறேன்" என்று கூறுவார்களாக. நீர் இதை கிறிஸ்துவின் நாமத்தில் இந்த ஜனங்களுக்கு அருள் வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். ஆமென். 2